2018ம் ஆண்டு வங்கியில் பணம் எடுத்தது எப்படி இப்போது நோண்டும் தெல்லிப்பளை பிரதேச செயலகம்..! ரவுடி பாணியில் தொலைபேசியில் பொதுமகனுக்கு அச்சுறுத்தல்..

ஆசிரியர் - Editor I
2018ம் ஆண்டு வங்கியில் பணம் எடுத்தது எப்படி இப்போது நோண்டும் தெல்லிப்பளை பிரதேச செயலகம்..! ரவுடி பாணியில் தொலைபேசியில் பொதுமகனுக்கு அச்சுறுத்தல்..

அரசாங்கத்தின் வீட்டுத்திட்டத்திற்காக 2018ம் ஆண்டில் வழங்கப்பட்ட பணத்தை தனக்கு தொியாமல் எடுத்து விட்டதாக கூறி தெல்லிப்பழை பிரதேச செயலகத்திலிருந்து தனக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறி பொதுமகன் ஒருவர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்த குறித்த பொதுமக்கள் விடயம் தொடர்பாக மேலும் கூறுகையில், இம்மாதம் 21ம் திகதி 0212242002, 0770778692 என்ற தொலைபேசி இலக்கங்களில் இருந்து மாலை 4.35 மணிக்கும், 4.55 மணிக்கும் இரு தொலைபேசி அழைப்புக்கள் வந்திருந்தன. 

அதில் பேசிய நபர்கள் 2018ம் ஆண்டு 9ம் மாதம் 4ம் திகதி வீட்டுத் திட்டத்திற்காக நான் வங்கியிலிருந்து பணம் பெற்றிருந்தேன். அதற்காக பிரதேச செயலரின் கையொப்பத்தை போலியாக இட்டதாகவும், அதற்காக புலனாய்வு பிரிவினர் வருவார்கள் என அச்சுறுத்தினார்கள். 

இதனையடுத்து சம்பவம் தொடர்பாக நான் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளேன். இந்த சம்பவம் தொடர்பாக யாழ்.மாவட்ட செயலர் மற்றும், ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றுக்கும் முறைப்பாடுகளை பதிவு செய்யவுள்ளேன். மேலும் தெல்லிப்பழை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட தையிட்டி கிராமத்தில் சமுர்த்தி ஊடாக எமது மக்களுக்கு பயன் கிடைப்பதில்லை. 

என்பதை சுட்டிக்காட்டி ஜனாதிபதி செயலகத்திற்கும், யாழ்.மாவட்ட செயலருக்கும் கடிதம் எழுதியிருந்தேன். அதன் பின்பு இவ்வாறான தொல்லைகள் கொடுக்கப்படுகின்றது. மேலும் 2018ம் ஆண்டு வங்கியில் பணம் எடுத்த விடயம் தொடர்பாக தற்போது பிரச்சினை எழுப்படும் நிலையில் காங்கேசன்துறையில் உள்ள அரச வங்கி கிளைக்கு சென்றிருந்தேன். 

அங்குள்ளவர்கள் 2018ம் ஆண்டு எனது வங்கி கணக்குக்கு அரசாங்கம் கொடுத்த 2லட்சம் ரூபாய் பணத்தை மீள இப்போது வைப்பு செய்யுமாறும். அதன் பின்னர் தெல்லிப்பழை பிரதேச செயலர் கடிதம் தருவார். அந்த கடிதத்தை எடுத்துவந்து மீண்டும் வைப்பு செய்த பணத்தை மீள பெறுமாறு கூறுகின்றனர். 

எனவே இது குறித்து பொறுப்புவாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாலச்சந்திரன் பிரகாஸ் என்ற குறித்த பொதுமகன் மேலும் கூறியிருக்கின்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு