750 ரூபாய் நிர்ணய விலை, கொழும்பில் 2500 ரூபாய்க்கு விற்பனை, யாழ்ப்பாணத்தில் 5000 ரூபாய்க்கும் மஞ்சள் இல்லையாம்..!

ஆசிரியர் - Editor I
750 ரூபாய் நிர்ணய விலை, கொழும்பில் 2500 ரூபாய்க்கு விற்பனை, யாழ்ப்பாணத்தில் 5000 ரூபாய்க்கும் மஞ்சள் இல்லையாம்..!

யாழ்.மாவட்டத்தில் மஞ்சளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. கொழும்புச் சந்தையில் 2ஆயிரத்து 500 ரூபாவுக்கே மஞ்சள் விற்பனை செய்யப்படுகின்றது. 

அதன் காரணமாக மஞ்சள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படு வதில்லை என்று நகர வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கை அரசு மஞ்சளுக்கு கட்டுப்பாட்டு விலையை அறிவித்துள்ளது. 

750 ரூபாவுக்கே விற்பனை செய்ய முடியும் என்று வர்த்தமானி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசு மஞ்சள் இறக்குமதிக்குத் தடை விதிக்கும் வரையில் 650 ரூபாவுக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இறக்குமதிக்கு தடை விதித்த பின்னர் விலை அதிகரித்தது. 

அதற்கிடையில் கொரோனா கட்டுப்பாட்டுக்கு மஞ்சள் கரைத்து தெளித்தால் நல்லது என்ற ஆயுள்வேத அறிவுரையை அடுத்து 

மஞ்சளுக்கான கேள்வி அதிகரிக்க அது 2ஆயிரம் ரூபா தொடக்கம் 2 ஆயிரத்து 500 ரூபா வரைக்கு விற்பனை செய்யப்பட்டது. 

கொழும்புச் சந்தையில் 2 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதால் அதனை யாழ்ப்பாண வர்த்தகர்கள் கொள்வனவு செய்வதில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. 

தற்போது இறக்குமதிக்கான கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பிலுள்ள தனியார்வர்த்தகர்கள் இந்தியாவிலிருந்து மஞ்சளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். 

மஞ்சள் போதியளவு இறக்குமதி செய்யப்பட்டால் 750ரூபாவுக்குயாழ்ப்பாணத்தில் அதனை விற்பனை செய்ய முடியும் என்று நகர வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு