யாழ்.மாவட்டத்தில் 6 லட்சம் மக்கள் வாழும் நிலையில் 360 பேருக்கு மட்டும் சோதனை நடாத்திவிட்டு யாழ்ப்பாணம் பாதுகாப்பாக உள்ளதென கூறலாமா?

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 6 லட்சம் மக்கள் வாழும் நிலையில் 360 பேருக்கு மட்டும் சோதனை நடாத்திவிட்டு யாழ்ப்பாணம் பாதுகாப்பாக உள்ளதென கூறலாமா?

யாழ்.மாவட்டத்தில் 6 லட்சம் மக்கள் வசிக்கும் நிலையில், வெறும் 360 பேருக்கு மட்டும் கொரோனா பரிசோதனை நடாத்தி சமூக மட்டத்தில் கொரோனா தொற்று ஏற்படவில்லை. என கூற முடியுமா? யாழ்.மாவ ட்டம் பாதுகாப்பாக உள்ளதென கூற முடியுமா?

மேற்கண்டவாறு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் த.காண்டீபன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். இன்று காலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் 6 லட்சம் வரையிலான மக்கள் வாழ்கின்றனர்.நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் சுமார் 360 பேருக்கு 

வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.அபாய நிலைமை நீங்க முதல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட கூடாது என கோரியிருந்தோம்.எனினும் எமது கோரிக்கை உதாசீனம் செய்யப்பட்டு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

இது மிகவும் ஒரு ஆபத்தான ஒன்றாகவே கருத கூடியதாக உள்ளது என்றார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு