வல்வெட்டித்துறையில் 15 வயது சிறுவனின் கொள்ளை கும்பல்..! பின்னணி என்ன? சம்மந்தப்பட்டோர் யார்? திருடப்பட்ட பொருட்கள் எங்கே? பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

ஆசிரியர் - Editor I
வல்வெட்டித்துறையில் 15 வயது சிறுவனின் கொள்ளை கும்பல்..! பின்னணி என்ன? சம்மந்தப்பட்டோர் யார்? திருடப்பட்ட பொருட்கள் எங்கே? பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

யாழ்.வல்வெட்டித்துறை- பொலிகண்டி மற்றும் இலக்கணாவத்தை பகுதிகளில் பல கொள்ளை சம்பவங்களுக்கு காரணமான 15 வயது சிறுவன் தலமையிலான 5 பேர் கொண்ட கொள்ளை கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 15 பவுண் நகை மற்றும் 50 ஆயிரம் பணம் ஆகியவற்றையும் மீட்டுள்ளனர். 

மேலும் இவர்களிடமிருந்து நகைகளை குறைந்த விலைக்கு வாங்கிய பெண் அடையாளம் காணப்பட்டு அவரிடம் பல ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் நகை மற்றும் பணம் மீட்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாக வல்வெட்டித்துறை பொலிஸார் கூறியிருக்கின்றனர். 

இந்தக் கும்பலைச் சேர்ந்த ஐவரும் வல் வெட்டித்துறை, பொலிகண்டி மற்றும் இலக்கணாவத்தை ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள். இருவருக்கு 15 வயது. மற்றையோர் 18,21,26 வயதுடையவர்கள். இவர்களில் இருவர் சகோதரர்கள். முதலில் இவர்கள் 15 வயதுச் சிறுவன் தலைமையில் நான்கு பேர் கொண்ட கும்பலாகவே திருட்டுக்களில் ஈடுபட்டுள்ளனர். 

பின்னர் இவர்கள் 15 வயதுடைய இன்னொரு சிறுவனை அழைத்து அவருடைய வாயில் சிகரெட் வைத்து புகைப்பது போன்று ஒளிப்படம் எடுத்துள்ளனர். 

அதை அந்தச் சிறுவனுக்கே காட்டி “உன் வீட்டிலுள்ள நகைகள், பணம் என்பனவற்றை உன் வீட்டுக்காரருக்குத் தெரியாது எடுத்துவந்து எங்களிடம் தரவேண்டும். மறுத்தால் சிகரெட் புகைப்பது போன்ற படத்தை இணையத்தில் பதிவிட்டுவிடுவோம்” என்று அச்சுறுத்தியுள்ளனர். 

அதனால் அந்தச் சிறுவன் தன் வீட்டிலுள்ள தாயின் நகைகள் மற்றும் பணத்தை சில நாள்களாக எடுத்துச் சென்று அந்தக் கும்பலிடம் கொடுத்துள்ளான். 

அவ்வாறு தாயின் காப்பு, சங்கிலி என்று சுமார் 15 பவுண் நகைகளை சிறு வன் தன் வீட்டிலேயே திருடிச் சென்று அந்தக் கும்பலிடம் வழங்கியுள்ளான். கனடா நாட்டு பணம் இலங்கைப் பெறும் தியில் சுமார் 50 ஆயிரம் ரூபாவையும் தன்வீட்டிலேயே திருடிச் சென்று கொடுத்துள்ளான். 

பின்னர் அந்தச் சிறுவனின் 'நேர்மை' பிடித்துக் கொண்டதால் , அவனையும் தம்முடன் இணைத்துக் கொண்டது இந்தத் திருட்டுக் கும்பல். பின்னர் இவர்கள் ஒரு வீட்டில் கூரை பிரித்து நுழைந்து அலுமாரியிலிருந்த நகைகளைத் திருடியுள்ளனர். மற்றொருவீட்டுக்குள் நுழைய முடியாததால், வீட்டில் நின்ற ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள் டிக்கியில் இருந்த 15 ஆயிரம்ரூபாபணத்தைத்திருடியுள்ளனர். 

மற்றொரு வீட்டிலும் இவ்வாறு நகைகளும் பணத்தையும் திருடியுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்ததா கப் பொலிஸார் தெரிவித்தனர். 

திருட்டு நகைகளை வாங்கிய பெண் இந்தக்கும்பல் திருடிய நகைகளை உடுப்பிட்டியிலுள்ள ஒரு பெண்ணிடம் மிகக் குறைந்த விலையில் விற்றுள்ளனர். அந்தப் பெண் நகைகளை வங்கிகளில் அடகு வைத்துள்ளார். அதற்கான ஏராளமான பற்றுச்சீட்டுக்கள் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர். 

அவரிடமுள்ள பற்றுச் சீட்டுக்களின் தொகையை வைத்து குறித்த பெண்மணி வேறு பல கொள்ளை மற்றும் திருட்டுக்களுடன் தொடர்புடைய நகைகளையும் பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

குறித்த பெண்ணிடமிருந்து உருக்கியதங்கத்தையும் மீட்டதாகப் பொலிஸார் கூறினர். இதுவரை திருட்டுக் கும்பலிடமிருந்து சுமார் 15 பவுண் நகைகள், 50 ஆயிரம் ரூபா பணம் , அலைபேசி, டப், என்பன மீட்கப்பட்டுள்ளன. வேறொரு திருட்டுச் சம்பவம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் இந்தத் திருட்டுக் கும்பலைச் சேர்ந்த ஒருவர்பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். 

அப்போது அவரது அலைபேசியில் சில சந்தேகத்துகிடமான உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் பொலிஸாரிடம் சிக்கின, அதனையடுத்தே விசாரணைகளின் போது 15 வயதுச் சிறுவனின் தலைமையில் இயங்கும் திருட்டுக் கும்பல் பற்றிய அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்தன. 

அதனையடுத்து அதிரடி வேட்டையில் இறங்கிய பொலிஸார், ஐந்து பேரை யும் மடக்கிப் பிடித்தனர். குறித்த ஐவர் கொண்ட கும்பல் மேலும் பல இடங்களில் இடம்பெற்றதிருட்டுக்களு டன் தொடர்புபட்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை தொடர்கின்றது என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.  

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு