சமுர்த்தி உத்தியோகஸ்த்தரின் மாட்டை திருடி இறைச்சிக்காக வெட்டிய 3 பெண்கள் கைது..! யாழ்.காரைநகரில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
சமுர்த்தி உத்தியோகஸ்த்தரின் மாட்டை திருடி இறைச்சிக்காக வெட்டிய 3 பெண்கள் கைது..! யாழ்.காரைநகரில் சம்பவம்..

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது மாடு திருடி இறைச்சிக்காக வெட்டிய 3 பெண் கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், 3 ஆண்கள் தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்ப வம் காரைநகர் களபூமி சிவகாமி அம்மன் ஆலயத்தடியில் இடம்பெற்றுள்ளது. 

காரைநகர் களபூமி பகுதியில் உள்ள சமுர்த்தி உத்தியோகஸ்தருடைய 40 ஆயிரம் பெறுமதியான காளை மாடு கடந்த 19 ஆம் திகதி (நேற்று முன்தினம்) நண்பகல் 12 மணியளவில் களவாடப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் 

அப்பகுதி கிராம சேவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து களவாடப்பட்ட மாட்டினை அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தேடியுள்ளனர். இந்நிலையில் மறுநாள் 20 ஆம் திகதி (நேற்று) களவாடப்பட்ட மாடு 

சிவகாமி அம்மன் ஆலயத்திற்கு மிக அருகில் பகுதியில் வைத்து வெட்டி இறைச்சியாக்கி விற்பனை செய்த கும்பலை ஊர் இளைஞர்களுடன் இணைந்து பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். இதன் போது அங்கிருந்த 3 ஆண்கள் 

ஓடித்தப்பிய நிலையில் 3 பெண்களை பொலிஸார் கைது செய்ததுடன், ஒரு தொகுதி இறைச்சினையும் மீட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் குறித்த காளை மாட்டின் இறைச்சி சுமார் 20 பேருக்கு 

விற்பனை செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. விசாரணைகளின் முடிவில் கைது செய்யப்பட்ட 3 பெண்களும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.மேலும் தப்பி ஓடியவர்களையும் 

கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். சிவகாமி அம்மன் ஆலயத்திற்கு சொந்தமான காணியில் அடாத்தாக குடியேறியிருக்கும் ஒரு கும்பலினாலேயே 

இந்த செயல் அரங்கேற்றப்பட்டுள்ளது என்று ஊர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு