பட்டினி சாவிலிருந்து யாழ்ப்பாணம் தப்பியது எப்படி..? நாங்கள் திணறினோம், மனம் திறந்த யாழ்.மாவட்ட செயலர்..

ஆசிரியர் - Editor I
பட்டினி சாவிலிருந்து யாழ்ப்பாணம் தப்பியது எப்படி..? நாங்கள் திணறினோம், மனம் திறந்த யாழ்.மாவட்ட செயலர்..

யாழ்.மாவட்டம் ஊரடங்கு சட்டத்தினால் முடக்கப்பட்டதும் முதல் வாரத்தில் மக்களுக்கான நிவாரணம் வழங்கலில் திணறினோம். ஆனால் அதற்கு பின்னர் யாழ்.மாவட்ட மக்களின் பாரிய ஒத்துழைப்பினால் தேவையான அனைத்தையும் செய்தோம். மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேஸன் கூறியிருக்கின்றார். 

இது குறித்து மேலும் அவர் கூறுகையில், ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் முதல் வாரத்தில் யாழ்.மாவட்டத்திலுள்ள வாழ்வாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கும் விடயத்தில் திணறினோம். 

ஆனால் யாழ்.மாவட்ட மக்களின் ஒத்துழைப்பு மற்றும் உதவியால் அடுத்தவாரமே பாதிக்கப் பட்ட மக்களுக்கு தேவையான சகலவற்றையும் நாங்கள் செய்தோம். 

ஒருவர் என்னை எச்சரித்தார் யாழ்.மாவட்டத்தில் பட்டினி சாவு வரப்போவதாக. ஆனால் அந்த நிலமை ஏற்படாமல் தடுக்க முடிந்தது. யாழ்.மாவட்ட மக்களின் ஒத்துழைப்பு மற்றும் உதவியினாலேயே என மாவட்ட செயலர் கூறினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு