ஆபத்தின் மத்தியில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த இதுவே காரணம்..! மனம் திறந்த ஜனாதிபதி, மக்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை..
இலங்கையில் கொரோனா சவால்களுக்கும் மத்தியில் வீழ்ச்சியடைந்து செல்லும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஊரடங்கு சட்டத்தை தளர்துகிறோம். இந்த சந்தர்ப்பத்தில் மக்கள் பொறுப்புக்களை உணர்ந்து செயற்படவேண்டும்.
மேற்கண்டவாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை செய்துள்ளார். அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, கொரோனா வைரஸ் தொற்றுநோயை இல்லாதொழிப்பது மற்றும் நாட்டின் பொருளாதாரம்
மற்றும் அரச தனியார் துறைகளின் வருவாயை பலப்படுத்துவது குறித்து கவனம் செலுத்துவதன் காரணத்தினால் கடந்த நான்கு வாரங்களாக பிறப்பிக்கப்பட்ட நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு சட்டத்தை தளர்ப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
இந்த நிலையில் தமது பொறுப்புகளை உணர்ந்து செயற்படுவது நாட்டு மக்கள் அனைவரதும் கடமையாகும். சுகாதார அதிகாரிகள் மூலமாக அறிவுறுத்தப்படும் காரணிகள் மற்றும் அரசாங்கம் விதித்துள்ள கட்டுபாடுகளை முறையாக பின்பற்றி எமக்குள்ள சவால்களை வெற்றிகொள்ள அனைவரதும் ஒத்துழைப்புகளை வழங்குமாறு நாட்டு மக்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். என அவர் பதிவேற்றியுள்ளார்.