யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையம் பாதுகாப்பானது அல்ல..! அங்கிருந்தே 10 பேருக்கு கொரோனா பரவியது, அறிக்கை ஜனாதிபதிக்கு சென்றது..

ஆசிரியர் - Editor I
யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையம் பாதுகாப்பானது அல்ல..! அங்கிருந்தே 10 பேருக்கு கொரோனா பரவியது, அறிக்கை ஜனாதிபதிக்கு சென்றது..

யாழ்.பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒருவர் ஊடாகவே அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்த மற்றவர்களுக் கும் தொற்று உண்டானது. என கூறியிருக்கும் சமுதாய மருத்துவ நிபுணர் முரளி வல்லிபுரநாதன், குறித்த விடயத்தை அறிக்கை ஊடாக ஜனா திபதியின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கின்றார். 

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருக்கும் மருத்துவர் முரளி வல்லிபுர நாதன் இது குறித்து மேலும் கூறுகையில், காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்த 10 பேருக்கு கடந்த 14ஆம். 15 ஆம் திகதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் கொரோனாத் தொற்று உறுதியானது. 

காங்கேசன்துறை தனி மைப்படுத்தல் மையத்தில், கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கக் கூடிய வாறான ஒழுங்குகள் இல்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இருப்பினும் தனிமைப்படுத்தல் மையங்களுக்குப் பொறுப்பான இராணுவத்தளபதி சவேந்திர சில்வா, காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் மையத்திலிருந்தவர்களுக்கு கொரோனாத் தொற்று ஏற்படக் காரணம் 

சுவிஸ் மதபோதகர் என்றும், அங்கிருந்தவர்களிடமிருந்து மற்றையவர்களுக்கு பரவவில்லை என்றும் கூறியிருந்தார்.இந்த நிலையில் முரளி வல்லிபுரநாதன் கடந்த 6ஆம் திகதியும் 15 ஆம் திகதியும் வெளியிட்ட அறிக்கையில் தனிமைப்படுத்தல் நிலையங்களின் பாதுகாப்புக் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். தென்னிலங்கையில் தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து வெளியேறிய ஒருவருக்கு 

10 நாள்களின் பின்னர் தொற்று ஏற்பட்டிருந்தது. இதனை அடிப்படையாக வைத்து தனிமைப்படுத்தல் நிலையங்களின் பாதுகாப்புத் தொடர்பில் அவர் கடந்த ஏப்ரல் 6ஆம் திகதி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் மையத்தில் கடந்த 14 ஆம் திகதி தொற்றுக்குள்ளானவர்கள் 8 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். 

சுவிஸ் மதபோதகர் யாழ்ப்பாணத்துக்கு வந்து மார்ச் மாதம் 15 ஆம் திகதி நாடு திரும்பியிருந்தார். 30 நாள்களின் பின்னர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 8 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. அங்கு முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாத் தொற்றாளர்களிலிருந்தே இவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கின்றது 

என்ற கருத்தை முரளி வல்லிபுரநாதன் முன்வைத்திருந்தார். தனிமைப்படுத்தல் மையங்கள் கொரோனா தொற்றாதவாறான பாதுகாப்பு நிலை யங்களாக இல்லை என்ற அவரது அறிக்கை ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு