காணிகளை கேட்டு போராடிய கேப்பாபிலவு மக்கள் நீதிமன்றினால் எச்சரிக்கப்பட்டனர்.

ஆசிரியர் - Editor I
காணிகளை கேட்டு போராடிய கேப்பாபிலவு மக்கள் நீதிமன்றினால் எச்சரிக்கப்பட்டனர்.

தமது சொந்த காணிகளை படையினரிடமிருந்து மீட்டு கொடுக்ககோரி போராட்டம் நடத்திய கேப்பாபில வு மக்கள் இன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றினால் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக் கின்றார்கள். 


கேப்பாபிலவு மக்கள் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமக்கு சொந்தமான 184 ஏக்கர் காணியை மீ ட்டு தருமாறு கோரி 348 நாளாக இன்றும் போராட்டத்தை நடத்திவருகின்றனர். 


இந்நிலையில் சுதந்திர தினத்தில் ஆ

ர்ப்பாட்டம் நடத்தினார்கள் எனவும், நல்லிணக்கத்திற்கு குந்தகமாக நடந்து கொண்டார்கள் எனவும் மு ல்லைத்தீவு- முள்ளியவளை பொலிஸார் கேப்பாபிலவில் தமது சொந்த காணிகளை கேட்டு போராடிவரு ம் மக்களில் 5 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர். 


இந்நிலையில் மேற்படி 5 பொதுமக்களும் இன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். இதன்போது 5 பொதுமக்களும் எச்சரிக்கப்பட் டு விடுவிக்க

ப்பட்டுள்ளார்கள். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு