யாழ்.மாவட்டத்திற்கு கொரோனா கொண்டுவந்தது சுவிஸ் போதகர் மட்டுமே..! இராணுவம் மீதான விமர்சனங்களை நிறுத்துங்கள். இராணுவ தளபதி காட்டம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திற்கு கொரோனா கொண்டுவந்தது சுவிஸ் போதகர் மட்டுமே..! இராணுவம் மீதான விமர்சனங்களை நிறுத்துங்கள். இராணுவ தளபதி காட்டம்..

சுவிஸ் போதகரே யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டமைக்கு பிரதான காரணம். இதற்கு மேலதிகமாக பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒன்றாக இருந்தமையால்தான் கொரோனா தொற்று பரவியது என நம்புவதற்கு நாங்கள் தயாரில்லை. மூல காரணியும், முழு காரணியும் சுவிஸ் போதகரே. 

மேற்கண்வடறு இலங்கை இராணுவ தளபதியும், கொரோனா எதிர்ப்பு செயற்பாட்டு மையத்தின் தலைவருமான சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார். 

பலாலி தனிமைப்படுத்தல் நிலையம் பாதுகாப்பற்றது. என வெளியான செய்தி தொடர்பாக எழுப்பபட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், இலங்கையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்கள் இராணுவத்தின் கண்காணிப்பில் இயக்கப்படும் நிலையில் வழக்கமாக இராணுவம் மீதான விமர்சனங்களை முன்வைப்பவர்கள் இப்போதும் விமர்சிக்க வாய்புள்ளது என்பதை முன்கூட்டியே நாம் அறிந்திருந்தோம். 

எனினும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராயுமாறு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கின்றோம். மேலும் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கு தினசரி பரிசோதனை நடாத்துமாறும் பணித்திருக்கின்றோம். 

இவ்வாறான நிலையில் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒன்றாக இருந்ததால் தொற்று பரவியது என கூறப்படுவதை ஏற்க நாங்கள் தயாரில்லை. வடக்கில் குறிப்பாக இன்று யாழ்.மாவட்டத்தின் நிலைக்கு பூரணமான காரணம் சுவிஸ் போதகர் மட்டுமேயாவார். என இராணுவ தளபதி கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு