இங்கிலாந்தில் 3 வாரங்களுக்கு ஊரடங்கு!! -டொமினிக் ராப் அறிவிப்பு-
இங்கிலாந்தில் கொரோனா தொற்றுக் காரணமாக தொடர்ந்து 3 வாரங்களுக்கு ஊடரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என்று வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் அறிவித்துள்ளார்.
இதனிடையே மருத்துவமனையில் மேலும் 861 கொரோனா வைரஸ் இறப்புகளை இங்கிலாந்து பதிவு செய்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை மொத்தமாக 13,729 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளியால் நல்ல பலன் கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் மேலும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு தொடரும்.
இப்போது நடவடிக்கைகளை தளர்த்துவது பொது சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்றும், ஊரடங்கு தளர்த்தப்படுவதற்கு முன்னர் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் டொமினிக் ராப் கூறியுள்ளார்.