யாழ் மாநகரசபையின் அடுத்த முதல்வர் யார்?- சட்டம் என்ன சொல்கிறது

ஆசிரியர் - Admin
யாழ் மாநகரசபையின் அடுத்த முதல்வர் யார்?- சட்டம் என்ன சொல்கிறது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாநகரசபை முதல்வர் யார் என மல்லுக்கட்டிய ஆனல்ட், சிறில் ஆகிய இருவரும் மயிரிழையிலேயே வெற்றிபெற்றுள்ளனர். சுமார் 50 வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றுள்ளனர்.

இதேவேளை யார் அடுத்த மாநகரசபை முதல்வர் என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. எந்த கட்சியும் தெளிவான பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையேற்பட்டால், சபையில் வாக்கெடுப்பின் அடிப்படையில் முதல்வர் தீர்மானிக்கப்பட வேண்டும்.

இதையடுத்து, அடுத்த முதல்வர் பதவியை பெற கட்சிகளிடம் ஆதரவைப்பெற ஆனல்ட், சிறில் ஆகிய இருவரும் மற்றைய கட்சிகளுடன் பேச்சை ஆரம்பித்துள்ளனர். ஆனல்ட் தரப்பு ஈ.பி.டி.பி, ஐ.தே.கவுடன் பேச்சை நடத்தியுள்ளனர். சிறில் தரப்பு ஈ.பி.டி.பி, தமிழ் தேசிய பேரவையுடன் பேச்சு நடத்தியுள்ளனர். எனினும் தெளிவான முடிவுகள் எட்டப்படவில்லை.