பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களுக்கு தொற்று..! விசாரணை நடாத்துமாறு பணிப்பாளர் சத்தியமூர்த்தி முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தவர்களுக்கு தொற்று..! விசாரணை நடாத்துமாறு பணிப்பாளர் சத்தியமூர்த்தி முறைப்பாடு..

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களும் தமக்கு தொற்று ஏற்ப டாமல் பாதுகாக்கவேண்டும். என கூறியிருக்கும், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, இராணுவ அதிகாரி, சுகாதார அதிகாரிக்கும் பெறுப்புள்ளது. என கூறியுள்ளார். 

இன்று காலை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது

என்பதனை உறுதியாகக் கூற முடியாது. குறிப்பாக இவர்களுக்கு தொற்று ஏற்பட்டது மத போதகரினால் ஏற்பட்ட தொற்று சங்கிலி தொடராக இவர்களுக்கும் தொற்றி இருக்கலாம். ஆனாலும் தனிமைப்படுத்தியதால் ஒருவரிடம் இருந்து 

ஒருவருக்கு வந்தது என தெளிவாக கூறக் முடியாது. தனிமைப்படுத்தல் நிலையங்கள் அப்பகுதி சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் அந்த முகாமுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரி ஆகியோர் கண்காணித்து இருப்பார்கள். 

இவர்களை தவிர அங்கே தனிமைப்படுத்தப்பட்டு இருந்தவர்களும் பொறுப்புடன் இருந்திருக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இடையில் இடைவெளியை பேணி இருக்க வேண்டும். 

கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவி வந்திருக்க வேண்டும். ஆகவே அது ஒரு கூட்டு பொறுப்பு. இந்த கூட்டு பொறுப்பில் எங்கே பிழை நடந்தது என என்னால் தப்போது தெளிவாகக் கூற முடியாது. ஆனாலும் இது தொடர்பில் சுகாதார அமைச்சு , 

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தெளிவாக கூறியுள்ளேன். அது தொடர்பில் ஓரிரு நாளில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது. அதன் மூலம் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் 

அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு