மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டி நன்றி கூறிய பணிப்பாளர்..! நாமும் பாராட்டுவோம், நன்றி கூறுவோம்..

ஆசிரியர் - Editor I
மருத்துவர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையை பாராட்டி நன்றி கூறிய பணிப்பாளர்..! நாமும் பாராட்டுவோம், நன்றி கூறுவோம்..

புதுவருட கொண்டாட்டங்களை புறக்கணித்து ஓய்வில்லாமல் யாழ்.மாவட்டத்தில் இடர்கால சேவையாற்றிவரும் மருத்துவர்கள், தாதியர்கள், அனைத்து சுகாதார உத்தியோகஸ்த்தர்களுக்கும் பாராட்டுக்களையும், நன்றிகளையும் கூறியிருக்கிறார் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி. 

உலகை உலுக்கி வருகின்ற கொரோனோ வைரஸ் தொற்று இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றில் யாழ்ப்பாணத்திலும் 7 பேர் இணங்காணப்பட்டுள்ளனர். அத்தோடு சந்தேகத்தில் யாழ் போதனாவிலும் பலர் அனுமதிக்கப்பட்டு பரிசொதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதே போன்று கொரோனோ தொற்று இணங்காணப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பலரும் தனிமைப்படுத்தப்பட்டும் இருக்கின்றனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்க ளுக்கும் கொரோனோ பரிசொதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறாக கொரோனோ தொற்று தாக்கத்தால் இடர்காலப் பகுதியாக இந்தக் காலத்தில் வைத்தியசாலை வைத்தியர்கள், தாகதியர்கள், உத்தியோகத்தர்கள். ஊழியர்கள் இரவு பகலாக சேவையாற்றி வருகின்றனர். குறிப்பாக புதுவருடம் பிறந்துள்ள நிலையிலும் அதனையும் பொருட்படுத்தாது. 

இரவு பகலாக சேவையாற்றி வருகின்ற வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட அனைத்து துறைசார்ந்தவர்களையும் பணிப்பாளர் பாராட்டியுள்ளார். அவர்களை மக்களும் பாராட்டவேண்டும். அவர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிக்கு ஊக்குவிப்பை வழங்கவேண்டும். அது கடமையும் கூட. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு