சுவிஸ் போதகருடன் நெருக்கமாக பழகிய 14 பேருக்கு தனிமைப்படுத்தல் நீக்கம் இல்லை..! 3ம் கட்ட பரிசோதனை நடாத்தப்படவுள்ளது..

ஆசிரியர் - Editor I
சுவிஸ் போதகருடன் நெருக்கமாக பழகிய 14 பேருக்கு தனிமைப்படுத்தல் நீக்கம் இல்லை..! 3ம் கட்ட பரிசோதனை நடாத்தப்படவுள்ளது..

சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த நிலையில் அரியாலை மற்றும் தாவடி பகுதிகள் மற்றும் வடக்கின் 5 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் மட்டுமே த னிமைப்படுத்தலில் இருந்து விலக்கப்படுகின்றனர். 

சுவிஸ் போதகருடன் 5 நாட்கள் நெருக்கமாக பழகிய நிலையில் பலாலியில் தனிமைப்படுத்தப்ப ட்டிருக்கும் 20 போில் தொற்றுக்குள்ளான 6 பேர் தவிர்ந்த 14 பேருக்கு 23ம் திகதிவரையில் தனி மைப்படுத்தல் தொடரும். அவர்களுக்கு 3ம் கட்ட பரிசோதனையும் உண்டு. 

மேற்கண்டவாறு வடமாகாண சுகாதார பணிப்பளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இன்று காலை அவர் விடுத்துள்ள விசேட செய்தி குறிப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அதில் மேலும் கூறியிருப்பதாவது, 

அரியாலையில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் கடந்த 15.03.2020 அன்று நடைபெற்ற ஆராதனையில் கலந்துகொண்டவர்களுக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர்களுள் பெரும்பாலோனாருக்கான 

சுய தனிமைப்படுத்தற் செயற்பாடுகள் 23.03.2020 முதல் ஆரம்பிக்கப்பட்டன. இன்று அவர்கள் தத்தமக்குரிய சுய தனிமைப்படுத்தற் காலத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்திருப்பதைத் தொடர்ந்து அவர்களுக்கான சுய தனிமைப்படுத்தல்கள் 

இன்று காலையுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.மேலும் யாழ்ப்பாணத்தின் முதலாவது கொவிட்-19 நோயாளியின் வதிவிடத்தைச் சூழ தாவடிப் பகுதியில் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகள் 

மற்றும் சுய தனிமைப்படுத்தல்களும் இன்று காலையுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. ஆனாலும் தேவாலயத்திற்கு சுவிற்சர்லாந்திலிருந்து வருகைதந்து தொற்றுக்கு மூலகாரணமாக இருந்தவருடன் தனிப்பட்ட வகையில் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் 

என்ற வகையில் 20 பேர் காங்சேந்துறையில் நிறுவனத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்களில் 06 பேருக்கு தொற்று இருப்பது ஏப்ரில் 01, 02 ஆகிய திகதிகளில் உறுதிப்படுத்தப்பட்டதால் அவர்கள் 06 பேரும் 

உரிய சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஏனைய 14 பேருக்கான தனிமைப்படுத்தல் காலம் 23.04.2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்குரிய ஆய்வுகூடப் பரிசோதனைகளும் மீளச் செய்யப்படவுள்ளன.

தேவாலய நிகழ்வுகளால் தனிமைப்படுத்தப்பட்ட ஏனையோருக்கும் படிப்படியாக ஆய்வு கூடப் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன என கூறப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு