யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றில்லாத 1 வாரம் நிறைவு..! 2வது வாரத்தின் 1 நாள் இன்று..! பணிப்பாளர் மகிழ்ச்சி, இதுவலை 216 பேருக்கு சோதனை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றில்லாத 1 வாரம் நிறைவு..! 2வது வாரத்தின் 1 நாள் இன்று..! பணிப்பாளர் மகிழ்ச்சி, இதுவலை 216 பேருக்கு சோதனை..

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா நோயாளிகள் எவரும் அடையாளம் காண ப்படவில்லை. என கூறியிருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, மாவட்டத்தில் இதுவரை 216 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த 77 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 139 பேருக்கும் இதுவரையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. 

வெற்றிகரமாக 1ம் வாரம் நிறைவடைந்திருக்கின்றது. 2ம் வாரத்தின் 1ம் நாள் இன்று என அவர் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு