யாழ்.மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! 5 நாளை வெற்றிகரமாக கடக்கிறோம், 188 பேருக்கு சோதனை எவருக்கும் தொற்றில்லை..

ஆசிரியர் - Editor
யாழ்.மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! 5 நாளை வெற்றிகரமாக கடக்கிறோம், 188 பேருக்கு சோதனை எவருக்கும் தொற்றில்லை..

யாழ்.மாவட்டத்தில் 5வது நாளாக இன்றும் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவரும் அடையாளம் காணப்படவில்லை. என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். 

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 71 பேருக்கும், தனிமைப்படுத்தலில் உள்ள 117 பேருக்குமாக 188 பேருக்கு இதுவரை சோதனை நடத்தப்பட்டிருக்கும் நிலையில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை. 

மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 7ஆகவே இருந்து வருகின்றது. மேலும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 3 பேர் சந்தேகத்தின் பெயரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Ads
Radio
×