கிளிநொச்சியில் தேர்தல் அதிகாரி நீக்கம்! - முகநூல் பிரசாரத்தால் வந்த வினை

கிளிநொச்சி - விவேவானந்தா நகர் வாக்கு சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி கல்வி திணைக்கள ஆசிரியர் ஆலோசகர் நல்லையா ரஞ்ஜித்குமார் தேர்தல் திணைக்களத்தினால் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது முகநூல் ஊடாக சுயேட்சைகுழு ஒன்றுக்கு வாக்கு சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில், தேர்தல் திணைக்களத்தினால் இரவோடு இரவாக குறித்த நபர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.