SuperTopAds

கேப்பாபிலவு மக்களுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல்

ஆசிரியர் - Editor I
கேப்பாபிலவு மக்களுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்கல்

தேசிய சுதந்திர தினத்தினை துக்க தினமாக அனுட்டித்தமை மற்றும் சமாதானத் திற்கு இடையூறாக செயற்படுகின்றமை போன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி  கேப்பாபிலவு  கிராமத்தில் தமது சொந்த நிலங்களை கேட்டு போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு எதிராக பொலிஸார் வழக்கு தாக்க செய்திருக்கின்றார்கள். 


இந்நிலையில் நியாயமான கோரிக்கையினை முன்வைத்து போராடிவரும் தங்க ள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை பொலிஸாரினதும், நல்லாட்சி அரசா ங்கத்தினதும் அப்பட்டமான அராஜகம் என கேப்பாபிலவு மக்கள் கூறியுள்ளது டன், பொலிஸார் மீதும் நல்லாட்சி அரசின் மீதும் மக்கள் கோபத்தை காட்டினர்.


சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுட்டித்தமை மற்றும் சமாதானத்திற்கு இ டையூறாக செயற்படுகின்றமை போன்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி முல்லைத்தீ – முள்ளியவளை பொலிஸார் கேப்பாபிலவு மக்களுக்கு எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். 


இந்த வழக்கி தமது காணிகளை கேட்டு போராட்டம் நடாத்திவரும் கேப்பாபிலவு கிராமத்தைச் சேர்ந்த 5 பேருடைய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இது தொடர்பான கடிதம் ஒன்று மேற்படி கேப்பாவிலவு மக்கள் 5 பேருக்கும் நீதிமன்றத்தின் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது. அந்த கடிதத்தில் எதிர்வரும் 12ம் திகதி 

நீதிமன்றுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. 


கேப்பாபிலவு மக்க ள் தங்களுடைய சொந்த நிலத்தில் தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி கடந்த 345 நாளாக நேற்று 9ம் திகதி வரை தொடர்ச்சியான போராட்டங்களை நடாத்தி வருகின்றார்கள். 


தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆறுமுகம் வேலாயுதபிள்ளை...


இன்று 345 ஆவது நாளாக இதில் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றோம் எங்கள் முதாதையர் ஆண்டபூமியினை கோரியே தர்மத்தை நாடி நேர்மையான வழியில் இந்த போராட்டத்தை மேற்கொள்கின்றோம் படையினரிடம் பொலீஸாரிடம் நாங்கள் இதுவரைக்கும் முரண்படவில்லை பொலிஸார் எங்களுடன்தான் முரண்பட்டுள்ளார்கள் ஆலய வழிபாட்டிற்கு சென்ற எங்களை தடுத்தவர்கள் 

பொலிஸார்.   


 நாங்கள் எங்கள் நியாயமான முறையில் எடுத்துரைத்தோம் முன்னோர் ஆண்டபூமியினையும் சிறுவர்கள் படித்த பள்ளிக்கூடத்தையும் அந்த இடத்தில் அவர்களுக்கு காட்டுவதற்குத்தான் சென்றோம் ஆனால் பொலீஸ் அதிகாரி என்னை தவறான வார்தைகளால் பேசியுள்ளார்.


இன்னிலையில் நீதிமன்றில் பொலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். எல்லாரையும் குடியேற்றிய மாதிரி எங்களையும் எங்கள் காணியில் குடியேற்றுங்கள் என்றுதான் போராடினோம் நேர்மையான அரசு எங்களை இவ்வளவு காலம் இழுத்தடிக்காமல் குடியேற்றி இருக்கவேண்டும் கடந்த பத்து ஆண்டுகளாக எங்கள் நிலங்களில் உள்ள வருமானங்களை படையினர் எடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்.


இதனை தெரிவிக்கவே இலங்கையின் சுதந்திர தினத்தன்று கறுப்புகொடி ஏந்தி உலகத்தில் உள்ள தமிழ்மக்களுக்கு தெரியப்படுத்தும் முகமாகத்தான் அந்த இடத்திற்கு சென்றோம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளார்கள் இதே பொலீஸார் படையினருக்கு சார்பாக இருந்து இந்த வழக்கினை தொடர்கின்றார்கள்.


எவருடனும் நாங்கள் கோபதாபம் கொள்ளவில்லை எங்களை நியாயமான முறையில் மீள்குடியேற்றம் செய்யவேண்டும் மீள்குடியேற்றம் செய்த அன்று தான் நாங்கள் எங்கள் போராட்டத்தை நிறுத்தி எங்கள் இடங்களில் குடியேறுவோம் அதனை விடுத்து எனது உயிரை தியாகம் செய்யச் சொன்னாலும் நான் செய்ய தயாராக இருக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.