2 தொடக்கம் 3 வாரங்கள் அமைதியாக ஒத்துழையுங்கள்..! யாழ்.மாவட்ட மக்களிடம் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மன்றாட்டம்..

ஆசிரியர் - Editor I
2 தொடக்கம் 3 வாரங்கள் அமைதியாக ஒத்துழையுங்கள்..! யாழ்.மாவட்ட மக்களிடம் பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மன்றாட்டம்..

யாழ்.மாவட்ட மக்கள் 2 தொடக்கம் 3 வாரங்கள் அமைதியாக ஒத்துழைப்பு வழங்கி கட்டு ப்பாட்டுடன் இருந்தால் யாழ்.மாவட்டத்திலிருந்து கொரோனாவை முற்றாக அகற்றலாம். எமது மாவட்ட மக்களை நாம் பாதுகாக்கலாம். என பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் ஏ.தேவநேசன் கூறியுள்ளார். 

பிராந்திய சு காதார சேவைகள் பணிமனையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போ தே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் 319 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். 

அவர்களைவிட சிலர் வெளியில் இருக்க முடியும். அதனால் கொரோனா தொற்றுள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்திவிட்டோம் என்று கூறமுடியாது.எனவே யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்குச் சட்டத்தை நீடித்துவைத்து 

மக்களின் நடமாட்டைத்தைக் கட்டுப்படுத்தி வைக்கவேண்டிய நிலமை உள்ளது.அத்துடன், யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொரோனா தொற்றுப் பரம்பல் அதிகரித்தால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலோ அல்லது மாகாண வைத்தியசாலைகளிலோ போதியளவு வசதிகள் இல்லை. 

யாழ்ப்பாணத்தில் அடையாளப்படுத்தி முதலாவது கோரோனா நோயாளி கொழும்புக்கும் ஏனைய 6 பேரும் வெலிகந்தைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 கொரோனா நோயாளிகள் வரும்போது அங்குள்ள மருத்துவ சேவையாளர்கள் மத்தியில் ஒருவகை அச்சம் உருவாகும் என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு