யாழ்.மாவட்டத்தில் கொரோனா பாதிப்பற்ற பிரதேசங்களில் பகுதி பகுதியாக ஊரடங்கை தளர்த்த ஜனாதிபதி செலணியுடன் பேச்சு..! நாளை நடைமுறைக்கு வரலாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் கொரோனா பாதிப்பற்ற பிரதேசங்களில் பகுதி பகுதியாக ஊரடங்கை தளர்த்த ஜனாதிபதி செலணியுடன் பேச்சு..! நாளை நடைமுறைக்கு வரலாம்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் இடங்கள் தவிர்ந்த மாவட்டத்தின் மற்றய  இடங்களில் பகுதி பகுதியாக ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக யாழ்.மாவட்ட செயலக மட்டத் தில் ஆராயப்படுவதுடன், அனேகமாக நாளை திங்கள் கிழமை இது நடைமுறைக்கு வரலாம். 

மாவட்டத்தில் கொரோனா நோயாளி இனங்காணப்பட்டதை தொடர்ந்து கடந்த  மாதம் 24ம் திகதி தொடக்கம் ஊரட ங்கு சட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருந்துவருகின்றது. இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா நோயாளர்க ள் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் கூட தனிமைப்படுத்தலில் உள்ளவர்களே பாதிக்கப்படுகின்றனர். 

மேலும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட முதல்கட்ட மருத்துவ பரிசோதனையின்போது அவர்களுக்கு தொற்று இல்லை. என்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் தவிர் ந்த மற்றய பிரதேசங்களுக்கு உதாரணமாக பருத்துறை பிரதேசத்திற்கு ஒரு நேரத்திலும், 

தீவக பிரதேசத்திற்கு ஒரு நேரத்திலும், சாவகச்சோி பிரதேசத்திற்கு ஒரு நேரத்திலும் என பகுதி பகுதியாக ஊரடங் கு சட்டத்தை தளர்த்துவது தொடர்பாக ஜனாதிபதி செயலணி - யாழ்.மாவட்ட செயலகம் இடையில் கலந்துரையாட ல் இடம்பெற்றிருக்கின்றது. அநேகமாக இந்த நடைமுறை நாளை அமுலாகலாம் என கூறப்படுகிறது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு