யாழ்ப்பாணத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட 3 பேருக்கும் சுவிஸ் போதகருக்கும் இதுதான் சம்மந்தம்..! மேலும் பலருக்கு தொற்று இருக்கலாம்..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட 3 பேருக்கும் சுவிஸ் போதகருக்கும் இதுதான் சம்மந்தம்..! மேலும் பலருக்கு தொற்று இருக்கலாம்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலை யில் குறித்த நால்வரும் யார்? அவர்களுக்கும் சுவிஸ் மதபோதகருக்கும் என்ன தொடர்பு? போன்ற விடயங்கள் தற் போது விசாரணைகள் மூலம் தொியவந்திருக்கின்றது. 

கடந்த 15ம் திகதி சுவிஸ் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்த மதபோதருடன் பழகிய யாழ்.தாவடியை சேர்ந்த நபர் ஒ ருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்தார். இந்நிலையில் மதபோதகருடன் நெருக்கமாகபி பழகிய 20 பேர் அடையாளப்படுத்தப்பட்டு காங்கேசன்துறையில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் 

கடந்த 23ஆம் திகதியிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் 10 பேரின் மாதிரிகள் நேற்றுமுன்தினம் சோதனைக்காக எடுக்கப்பட்டன. அதன் பரிசோதனை முடிவுகள் நேற்று மாலை வெளியாகின. முதலில் அரியாலை மதபோதகருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

அதனையடுத்து அவரை நேற்றிரவு 8.30 மணிக்கு தனியான நோயாளர் காவு வண்டியில் வெலிக்கந்த ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.இதேவேளை எஞ்சியோரில் இருவருக்கு கொரோனா இருப்பது நேற்றிரவு 9 மணியளவில் தெரியவந்தது. அவர்களில் ஒருவர், 

சுவிஸிலிருந்து வந்த மத போதகரின் வாகனச் சாரதியாகச் செயற்பட்டவர். நவாலியைச் சேர்ந்த அவருக்கும் கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுவிஸிலிருந்த வந்த மத போதகர் அரியாலையிலுள்ள வீட்டில் தங்கியிருந்துள்ளார். அதே வளவில் அமைந்துள்ள இன்னொரு வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினரே, 

மத போதகருக்கு உணவுகள் வழங்கியுள்ளனர். அதன் காரணமாக அவர்கள் குடும்பமாக காங்கேசன்துறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் குடும்பத் தலைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாத் தடுப்பு மையத்திலுள்ள ஏனையோருக்கும் தொற்று இருக்கலாம் 

என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு