கொரோனா தொற்றுக்குள்ளான மதபோதகர் குறித்து மேலதிக தகவல்கள் வெளியானது..! 20 பேரின் தனிமைப்படுத்தல் காலம் நீடிக்கப்படலாம்..

ஆசிரியர் - Editor I
கொரோனா தொற்றுக்குள்ளான மதபோதகர் குறித்து மேலதிக தகவல்கள் வெளியானது..! 20 பேரின் தனிமைப்படுத்தல் காலம் நீடிக்கப்படலாம்..

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட மானிப்பாய் பகுதியை சேர்ந் த மதபோதகர் சுவிஸ் நாட்டிலிருந்துவந்த மதபோதகருடன் மிக நெருக்கமாக பழகியவர் என அடையாளம் காணப்பட்டிருக்கின்றார். 

கடந்த மாதம் 15ம் திகதி அரியாலை பிலதெல்பியா தேவாலயத்திற்கு சுவிஸ் நாட்டிலிருந்து வருகைதந்த மதபோதகருடன் பழகிய யாழ்.தாவடியை சேர்ந்த ஒருவர் கொரொனா தொற்றுக்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டார்.

இதனடிப்படையில் குறித்த மதபோதகளுடன் பழகிய மற்றும் அவர் கலந்து கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் என 346 பேர் வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்த ப்பட்டிருக்கின்றனர். குறித்த 346 பேரில் 20 பேர்சுவிஸ் போதகருடன்

 நெருக்கமாக பழகியதன் அடிப்படையில் காங்கேசன்துறையில் உள் ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களின் தனிமைப்படுத்தல் காலம் இம்மாதம் 6ம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், 

அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடாத்தப்பட்டபோதே கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் போதகர் அடையாளம் காணப்பட்டிருக்கின்றார். இதனை உறுதிப்படுத்தியி ருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் 

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் மக்கள் பீதியடையவேண்டாம். சுகாதார நடைமுறைகளை ஒழுங்காக பின் பற்றுமாறும் முடிந்தவரை வீடுகளுக்குள் இருக்குமாறும் கேட்டிருக்கின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு