SuperTopAds

ஆபத்தை நெருங்கிவிட்டோம்..! ஊரடங்கு சட்டத்தை இறுக்குங்கள், விசேட வைத்தியசாலையை நிறுவுங்கள், அரச மருத்துவ அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
ஆபத்தை நெருங்கிவிட்டோம்..! ஊரடங்கு சட்டத்தை இறுக்குங்கள், விசேட வைத்தியசாலையை நிறுவுங்கள், அரச மருத்துவ அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கை..

இலங்கையில் நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தி மாவட்டங்களுக் கிடையிலான பயணத்தை தடுக்கும் நடவடிக்கையினை இறுக்கமாக பின்பற்றுவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் மு யற்சிக்கவேண்டும். என இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்தை கோரியுள்ளது. 

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே குறித்த விடயம் கோரப்பட்டிருக்கின்றது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இலங்கையில் 80 வீதம் சமூக இடைவெளி பேணப்படுகிறது. முழுமையாக ஒரு கிராமத்தை அல்லது நகரத்தை தனிமைப்படுத்தல், 

மிக அவதான மட்டத்திலுள்ள பிரதேசங்களை அடையாளப்படுத்தி தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்தல், ஏனைய பிரதேசங்களில் தற்காலிகமாக ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தல் என்ற 3 கட்டங்களில் சமூக இடைவெளி பேணப்படுகிறது. 

சமூகத்தில் 80 வீத சமூக இடைவெளியை பேணுவதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றோம். அத்தோடு வங்கி சேவை, மருந்து மற்றும் உணவு உள்ளிட்ட சேவைகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும். 

அத்தோடு ஊரடங்கு சட்டத்தை மீறாமலிருப்பதற்கும், மாவட்டங்களுக்கு பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளாதார சந்தை, மீன்பிடித்துறைமுகம், மெனிங் சந்தை மற்றும் தேயிலை விற்பனை நிலையம் போன்ற முக்கிய பொது இடங்களில் மக்கள் 

மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். அத்தோடு ஒவ்வொருவரும் தனிநபர் நலன் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டும்.மேலும் முகக்கவசம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். 

வ்வாறு முறையாகப் பின்பற்றினால் வைரஸ் பரவலில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதைத் தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவர்.

எதிர்காலத்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மனித மற்றும் ஏனைய திறன்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அனுமதிப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான விசேட வைத்தியசாலைகள் நிறுவப்பட வேண்டும். 

இதற்கு சிறந்த இடமாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்தை நாம் பரிந்துரைக்கின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் அறிவித்துள்ளோம்.அதே போன்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்களோ ஏனைய சுகாதாரத்துறை பணியாளர்களோ தொற்றுக்குள்ளானால் 

பாரிய மனிதவள குறைபாடு ஏற்படும். எனவே இது குறித்து முன்னரே தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும். இது வரையில் நீர்கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர, களுபோவில , றாகமை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சில வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு 

சில பிரிவுகளும் முற்றாக மூடப்பட்டுள்ளன. இது போன்ற நிலைமை ஏனைய வைத்தியசாலைகளிலும் ஏற்பட்டால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பற்றாக்குறை ஏற்படக் கூடும். எனவே வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளித்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அத்தோடு வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை 15 நிமிடங்களில் கண்டறிவதற்காக ஏனைய நாடுகளில் மேற்கொள்ளப்படும் (ரபிட் டெஸ்ட்) Rapid Test பரிசோதனை முறைமையை இலங்கையிலும் அறிமுகப்படுத்தினால் மிகச் சிறந்ததாக அமையும். 

 இதன் மூலம் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களில் உண்மையில் தொற்றுக்குள்ளானவர்களையும் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களையும் இணங்காண முடியும்.மேலும் சிகிச்சைக்கான மருந்துகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

இலங்கைக்குள் க்ளோரோக்வின் (Hydroxy Chlroquine) என்ற மருந்தை பயன்படுத்துவது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தோடு எனிகன் (AVIGAN) எனப்படும் மருந்து பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.