ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து செயற்படுங்கள்..! யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி அறிவுரை..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் நோக்கத்தை உணர்ந்து செயற்படுங்கள்..! யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி அறிவுரை..

யாழ்.மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை வீதிகளில் தேவையில்லாமல் நடமாடுவதற்கோ, மைதானங்களில் விளையாடுவதற்கோ அல்ல. என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டு செயற்படவேண்டும். 

மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தபளதி மேஜர் ஜெனரல் றுவான் வணிகசூரிய கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், மக்களின் பாதுகாப்பு க்காக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

மக்கள் அதன் நோக்கத்தை சரியாக உணர்ந்து கொண்டு வீடுகளுக்குள் தங்கிருப்பதுடன், தங்க ளையும், தங்களை சூழவுள்ளவர்களையும் பாதுகாக்கவேண்டும். ஊரடங்கு சட்டம் தேவையற்று வீதிகளில் நடமாடுவதற்கும், 

மைதானங்களில் கூடி விளையாடுவதற்குமாக அமுல்படுத்தப்படவில்லை. என்பதை மக்கள் நன்றாக உணர்ந்த கொள்ளவேண்டும். என இராணுவ தளபதி மேலும் கூறியுள்ளார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு