யாழ்.மாவட்டத்தில் இப்படியும் ஒரு மனிதன்..! பதுக்கியவர்கள் மத்தியில் பாவப்பட்டவர்களுக்கு உதவுகிறார்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் இப்படியும் ஒரு மனிதன்..! பதுக்கியவர்கள் மத்தியில் பாவப்பட்டவர்களுக்கு உதவுகிறார்..

கொரோனா வைரஸ் தாக்கம் உணரப்பட்ட நிலையில் யாழ்.மாவட்டத்தில் முக கவசங்களுக்கு (மாஸ்க்) பெரும் தட்டுப்பாடு நிலவும் நிலையில் Jk Dreams Studio நிறுவனத்தின் உரிமையாளர் முக கவசங்களை கொள்வனவு செய்து பொதுமக்களை தேடி சென்று இலவசமாக வழங்குகிறார். 

கொரோனா பீதி உருவான பின்னர் யாழ்.மாவட்டத்தில் பொருட்கள் மட்டுமல்லாமல், முகக்கவ சங்கள், சுத்திகரிப்பு பொருட்களையும் பலர் வீடுகளில் பதுக்கியிருக்கும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முக கவசங்களை கொள்வனவு செய்து அதனை மக்களுக்கு இலவசமாக வழங்கும் பணியை மேற்கொண்டிருக்கின்றார். 

குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள மக்களை தேடி சென்று அவர்களுக்கு முக கவசங்களை வழங்கிவருவதுடன், தேவையாளர்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கும் வழங்க முடியும் என பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார். 

பொதுமக்களும், சுகாதார துறை அதிகாரிகளும் இவருடைய இந்த காலத்தை உணர்ந்த பணிக்கு பாராட்டுக்களை தொிவித்திருப்பதுடன், இப்படியானவர்களை நாங்களும் பாராட்டலாம். 

குறிப்பு- முக கவசங்கள் தேவைப்படுவோர் இவருடைய தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

இவர்களை தொடர்பு கொள்வதற்கு- 0779066688

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு