யாழ்.நகரில் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி..! பழுதடைந்த உணவுப் பொருட்களுடன் வர்த்தகர் சிக்கினார். உடனடியாகவே வழக்கு தாக்கல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நகரில் சுகாதார பரிசோதகர்கள் அதிரடி..! பழுதடைந்த உணவுப் பொருட்களுடன் வர்த்தகர் சிக்கினார். உடனடியாகவே வழக்கு தாக்கல்..

பழுதடைந்த உணவு பொருட்களை வைத்துக் கொண்டு வியாபாரம் நடத்த முயற்சித்த வர்ததக நிலையம் ஒன்று முற்றுகையிடப்பட்டு பெருமளவு பழுதடைந்த உணவுப் பொருட்கள், இறைச்சி, மீன் போன்றன மீட்கப்பட்டிருக்கின்றது. 

மேலும் குறித்த வர்த்தக நிலையம் உடனடியாக பூட்டப்பட்டுள்ளதுடன், உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கும் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் 

பூட்டப்பட்டுள்ள நிலையில் கடையின் பின்கதவு திறந்திருந்த நிலையில் குறித்த உணவகத்தில் குளிர்சாதனப்பெட்டியில் பாவனைக்குதவாத கோழி இறைச்சி மற்றும் காலங்கடந்த ரொட்டி மற்றும் மீன் போன்ற பல்வேறு உணவுப்பொருட்களை 

குளிர்சாதன பெட்டியில் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலையிலான குழுவினரால் சோதனையிப்பட்ட போது குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன 

அவை உடனடியாக அழிக்கப்பட்ட தோடு சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர் சஞ்சீவனால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு