ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கையில் வீதிகளில் அநாவசியமாக திரியும் யாழ்.மக்கள்..! கட்டுப்படுத்த படாதபாடுபடும் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கையில் வீதிகளில் அநாவசியமாக திரியும் யாழ்.மக்கள்..! கட்டுப்படுத்த படாதபாடுபடும் பொலிஸார்..

பொதுமக்களின் நன்மை கருதி ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளபோதும் உணவு பொருட்கள் விற்பனை நிலையம் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடும் பொதுமக்களை கட்டுப்படுத்த பொலிஸார் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டிருப்பதுடன், 

அநாவசியமாக வீதிகளில் நடமாடுபவர்களை விரட்டியடிக்கும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டிருக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என கூறப்ப ட்டதையடுத்து பொதுமக்கள் ஊரடங்கை மீறி ஆபத்தான முறையில் அநாவசியமாக வீதிகளில் கூடுவதை அவதானிக்ககூடியதாக உள்ளது.

யாழ்ப்பாணம்- திருநெல்வேலி பகுதியில் இன்று காலை அளவுக்கு அதிகமான மக்கள் கூடியதால் நிலமையை கட்டுப்படுத்த பொலிஸார் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதுடன், நேடியாக வீதியை மறித்து பொலிஸார் மக்களை விரட்டியடித்தனர். இதனையடுத்து சில நிமிடங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்தது. 

மேலும் வட்டுக்கோட்டை பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தமையினை தொடர்ந்து அந்த பகுதியில் தேவையற்ற கடைகளை பூட்டுமாறு பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர். மேலும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போது அநாவசியமாக வீதிகளில் நடமாடினால் பொலிஸார் அடுத்தகட்டமாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிலை உருவாகவுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு