அதியுச்ச இராணுவ பாதுகாப்புக்குள் யாழ்.தாவடி..! உட்செல்லவும், வெளி செல்லவும் தடை..

ஆசிரியர் - Editor I

யாழ்.மாவட்டத்தில் இனங்காணப்பட்ட 1 வது நோயாளி இனங்காணப்பட்ட நோயாளி தாவடி பகு தியை சேர்ந்தவர் என்ற அடிப்படையில் குறித்த பகுதி அதியுச்ச இராணுவ பாதுகாப்புக்குள் முடக் கப்பட்டிருக்கின்றது. குறித்த பகுதிக்குள் உள்நுழையவோ, வெளி செல்வதோ தடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தாவடி சுதுமலை ஊடான போக்குவரத்தும் முற்றாக தடை செய்யப்பட்டிருக்கின்ற து.  இன்று காலை 8.30 மணியில் அப்பகுதியில் இருந்து வெளியேறவோ அல்லது உள் நுழையவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் கிராம சேவகர் , பிரதேச செயலாளர் , 

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர், பொதுச் சுகாதார அதிகாரி , பொலிசார் , இராணுவத்தினர் உள்ளனர்.... யாழ்ப்பாணம் தாவடி சுதுமலை வீதியானது இன்று காலையிலிருந்து பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்த பகுதியில்

அண்மையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் வசித்து வந்திருந்த நிலையில் நேற்றைய தினம் தாவடி பகுதியில் கிருமித் தொற்று அகற்றும் வேலைதிட்டமானது சுகாதாரப் பிரிவினரால்முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் 

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியூடாக தாவடி சந்தியில் இருந்து சுதுமலைக்கு செல்லும் பாதையில் குறித்த ஒரு பகுதியானது பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள தோடு அப்பகுதியில் இருந்து வெளியே செல்பவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது 

குறித்த பகுதியில் ராணுவம் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்த ப்பட்டுள்ளார்கள் நேற்றைய தினம் கிருமித் தொற்று நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதிலும் எவரும் அவ்விடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு