செம்மணி ஆராதனையில் கலந்து கொண்டீர்களா..? நீங்களாக உங்களை அடையாளப்படுத்துங்கள்..! ஆளுநர் அவசர கோரிக்கை..

ஆசிரியர் - Editor I
செம்மணி ஆராதனையில் கலந்து கொண்டீர்களா..? நீங்களாக உங்களை அடையாளப்படுத்துங்கள்..! ஆளுநர் அவசர கோரிக்கை..

யாழ்.அரியாலை - கண்டிகண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்பியா கிறிஸ்தவ சபையில் கடந்த 15 ஆம் திகதி நடந்த ஆராதனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் சமூக பொறுப்பை உணர்ந்து தம்மை அடையாளப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள அறிக்கையல் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

அன்றைய தினம் சுவிஸ் நாட்டிலிருந்து வந்த ஒருவரால் போதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவர் ஒரு கொரோனா தொற்றாளர் என சந்தேகிக்கப்படுகிறது. அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மேலும் 2 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இதேபோன்று ஆராதனையில் கலந்து கொண்டவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது. 

குறித்த ஆராதனையில் கலந்துகொண்ட மக்களை யாழ்ப்பாண பிராந்திய சேவைகள் பணிமனையின் தொடர்பிலக்கத்திற்கு (0212227278) உடனடியாக தொடர்புகொண்டு தங்களது விபரங்களை தெரிவிப்பதன் மூலம் மருத்துவ அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் 

நேரடியாக அவர்களது இடங்களுக்கு செல்வதன் மூலமாகவும் பாதுகாப்பான முன்னெச்சரிக்கை ஒழுங்குகள் செய்யப்படும் என்றும் இவ்வாறு தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான ஒழுங்குகளை செய்வது தங்களுக்கும் தங்களை சார்ந்தவர்களுக்கும் இந்த வேளையில் அவசியமாகிறது.

 மருத்துவ அதிகாரிகளின் தொடர்புகள் கிடைக்கும் வரை தங்களை இயன்ற அளவில் பாதுகாப்பாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும்படியும் கேட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு