மக்கள் பீதியடையவேண்டாம்..! தற்காப்பு நடவடிக்கையை செய்யுங்கள், எதிா்கொள்ள நாங்கள் தயாா்.. யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் கூறுகிறாா்..

ஆசிரியர் - Editor I
மக்கள் பீதியடையவேண்டாம்..! தற்காப்பு நடவடிக்கையை செய்யுங்கள், எதிா்கொள்ள நாங்கள் தயாா்.. யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் கூறுகிறாா்..

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாண மக்கள் பீதியடைய தேவையில்லை. தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொ ண்டால் வடமாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவலை பூரணமாக கட்டப்படுத்தலாம். என கூறியிருக்கும் யாழ்.போதனா வைத் தியசாலை பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி, பாதிக்கப்பட்டால் சிகிச்சை வழங்க தயாா் எனவும் கூறியுள்ளாா். 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதன் இன்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து அங்குள் ள நிலமைகள் தொடா்காக நோில் ஆராய்ந்தாா் இதன்போதே மேற்படி விடயத்தை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி கூறியிருக்கின்றாா். இது குறித்து மேலும் அவா் கூறுகையில், 

யாழ்.போதனா வைத்தியசாலையில் இதுவரையும் கொரானா நோய் சந்தேகத்தின் பேரில்8 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் ஐவர் வெளியேறிவிட்டனர். மீதியுள்ள மூவரில் அவர்களதுபரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அவர்களுக்கும் நோய் தொற்று இல்லையாயின்அவர்களும் வெளியேறுவார்கள்.அனுமதிக்கப்பட்டு இருப்பவர்களும் 

கடுமையான நோயை கொண்டிருக்கவில்லைஇப்போதைய நிலமையில் அவர்களுக்கு தேவையான போதிய வசதிகளை கொண்டிருக்கிறோம்கொரானா நோய் விடுதியில் 20 படுக்கைகளை கொண்டதாக அமைந்துள்ளது.கொரானா நோய் என உறுதிசெய்யப்பட்டால் தனியான அறை வசதிகளும் செய்யப்பட்டு பாராமரிக்கப்படும்

வடமாகாணத்தை பொறுத்தவரையில் இதுவரை நோய்தொற்று அறியப்படாமையால் மக்கள் பீதியடையதேவையில்லைவடபகுதி மக்கள் சுகாதார அமைச்சு, உலக சுகாதார நிறுவனம் போன்றவை கூறும்தற்காப்பு நடவடிக்கைகள் (ஒன்று கூடல்,ஒருவர் மற்றவருக்கு அருகில் செல்வதை தவிர்த்தல், பிறரை தொடுவதை தவிர்த்தல், 

அடிக்கடி கைகழுவுதல், பொது நிகழ்ச்சிகளைதவிர்தல்) போன்றவைமூலம் ஒருசிலரிடம் வைரஸ் கிருமி காணப்பட்டாலும் தொற்றுவதை தவிர்கமுடியும். பொதுமக்கள் பயப்பிடதேவையில்லை. சுகாதார அமைச்சு எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தருகின்றனர்.நாங்கள் தாயர் நிலையிலேயே உள்ளோம். 

நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் அவர்களை பரிசோதிக்கவும் பாராமரிக்கவும் தயார்நிலையிலேயே உள்ளோம். வைத்தியசாலை கூட்டம் இரண்டு நாட்களுக்கு ஒருதடவை கூட்டி கலந்துரையாடி வருகிறோம். அவசர தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்துள்ளோம்.எதுவிதமான ஐயங்கள் இருந்தாலும் 

எங்களை தொடர்பு கொள்ளலாம்.வடபகுதியை பொறுத்த வகையில் மிகுந்த கரிசனையோடும் அவதானத்தோடும் இருக்கின்றோம் என்பதை கூறிக்கொள்கிறேன்.என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு