SuperTopAds

நிலமை மேலும் மோசமாகலாம்..! தீவிர நடவடிக்கையில் இறங்கியது அரசு, நாமும் ஒத்துழைப்போம்..

ஆசிரியர் - Editor I
நிலமை மேலும் மோசமாகலாம்..! தீவிர நடவடிக்கையில் இறங்கியது அரசு, நாமும் ஒத்துழைப்போம்..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பொது நிகழ்வுகள், கூட்டங்கள், சமய நி கழ்வுகளுக்கு தடைகள் விதிக்கப்பட்டிருப்பதுடன், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களை பூட்டி நோய் பரவுவதை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 

இந்து சமய நிகழ்வுகளுக்கு தடை

இந்து சமய நிகழ்வுகள், வழிபாடுகளை முடிந்தளவு வீடுகளிலேயே மேற்கொள்ளுமாறும் பொதும க்கள் அதிகம் கூடும் ஆலயங்களுக்கு செல்லவேண்டாம். என இந்து சமய தலைவா்கள் மற்றும் க லாசார அமைச்சு அறிவித்திருக்கின்றது. 

தேவாலயங்களில் வழிபாடுகளை நிறுத்த கோாிக்கை

இம் மாதம் 31ம் திகதி வரை கத்தோலிக்க தேவாலயங்களில் ஞாயிறு வணக்க பழிபாடுகளை நிறு த்தி ஒத்துழைக்குமாறு பேராயா் கா்தினால் மல்கரம் ரஞ்சித் ஆண்டணை சகல தேவாலயங்களிட மும் கோாிக்கை விடுத்துள்ளாா். 

பொது நிகழ்வுகளுக்கு தடை

பொதுமக்கள் கூடும் வகையிலான பொது நிகழ்வுகள், பொது கூட்டங்களை நடாத்துவதற்கு 2 வா ரங்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. 

பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு மட்டும் பயணிகள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் பஸ்களில் ஏற்றிச்செல்லப்படும் பயணிகளின் எண்ணிக்கையை வரையறுப்பது தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை அவதானம் செலுத்தியுள்ளது.

அதற்கமைய, பஸ்களில் காணப்படும் ஆசனங்களுக்கு மேலதிகமாக குறைந்த அளவிலான பயணிகளை மாத்திரமே ஏற்றிச்செல்ல முடியும்.இதன் காரணமாக, மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக 

இலங்கை போக்குவரத்து சபையின் பொது முகாமையாளர் A.H.பண்டுக குறிப்பிட்டார். போக்குவரத்து அமைச்சின் செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, அனைத்து சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் முகக் கவசங்களை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.