மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் தப்பிக்க வழியே இல்லை. -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆவேசம்-

ஆசிரியர் - Editor I
மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் தப்பிக்க வழியே இல்லை. -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆவேசம்-

இலங்கையில் மக்களுடைய பணத்தை கொள்ளையடிப்பதற்கு எவருக்கும் உரிமையில்லை. மக்களுi டய பணத்தை கொள்ளையடித்தவர்கள் உறவினர்களாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தகுந்த தண்டணை வழங்கப்படும். மேற்கண்டவாறு ஜனாதிபதி மைத் திரிபால சிறிசேனா கூறியிருக்கின்றார்.

உள்@ராட்சி சபை தேர்தலில் சிறீலங்கா சுதந்திரகட்சி சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களை ஆ தரித்து இன்று யாழ்.மாநகரசவை மைதானத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உ ரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், மக் களுடைய பணத்தை அரசியல்வாதிகள் சிலர் கொள்ளையடித்துள்ளார்கள். இது நல்லாட்சி காலத்திலும் நடந்துள்ளது. முன்னையை மஹிந் த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்திலும் நடந்திருக்கின்றது.

அரசியல்வாதிகள் மக்களுடைய பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். அரசாங்கத்தின் பணம் என்பது மக்களுடைய பணம். மக்களுடைய பணத்தை கொள்ளையடிக்க யாருக்கும் உரிமையி ல்லை. மக்களுடைய பணத்தை பொக்கட்டுக்குள் தள்ள யாருக்கும் உரிமையில்லை. எங்களுடைய ஆட் சிக்காலத்தில் மத்திய வங்கி பிணைமுறி கொள்ளை நடைபெற்றுள்ளது. அதேபோல் முன்னாள் ஜனாதிப தி மஹிந்த காலத்திலும் பாரிய கொள்ளைகள் நடைபெற்றுள்ளது. இவை அனைத்தும் விசாரிக்கப்படும்.

கொள்ளையடித்தவர்கள் உறவினர்களாக இருந்தாலும், நண்பர்களாக இருந்தாலும் தண்டணை வழ ங்கப்படும். தண்டணையில் ஒரு மாற்றமும் இல்லை. மேலும் மஹிந் லங்கா என்ற விமான சேவையில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக விசாரிப்பதற்கான ஆணைக்குழு கடந்த வாரம் உருவாக்கப்பட்டுள் ளது. தவறானவர்களுக்கு தண்டணை நிச்சயமாக உண்டும். இதற்கு மக்களுடைய ஒத்துழைப்பு எனக்கு நிச்சயமாக உண்டு. 

மேலும் மீள்குடியேற்றத்திற்காக வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 100ற்கு 60 வீதமான நிதி செலவிடப்ப டாமல் திரும்பியிருக்கின்றது. இந்த நிதி மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டு திட்டங்களை உருவாக்கு வதற்காக கொடுக்கப்பட்டது. அந்த நிதியில் 60 வீதமான நிதி செலவிடப்படாத நிலையில் திரும்பியிருக்கின் றது. நான் பொய் சொல்லவில்லை. நான் பொய் சொல்கிறேன். என யாரும் நினைத்தால் கணக்கறிக்கைகளை எடுத்து பார்க்கலாம். 

இவ்வாறு பெருமளவு நிதி திரும்பி செல்வதற்கு காரணம் அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையில் ஒற்றுமையில்லாமல் செயற்படுவதேயாகும். தேர்தல் காலத்தில் நீங்கள் பிரிந்து நின் று செயற்படலாம். ஆனால் தேர்தலின் பின்னர் ஒன்றிணையுங்கள். மேலும் இங்கே வருவதற்கு முன்ன ர். வவுனியாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தேன். அங்கே என்னை சந்தித்த மக்கள் கூறுகிறார்கள். 

நான் ஒரு கட்சிக்கு மட்டும் பணம் கொடுப்பதாக. அது எனக்கு வேதனையாக உள்ள து. நான் கட்சிகளை பலப்படுத்துவதற்காக கட்சிகளுக்கு பணம் கொடுக்கவில்லை. மக்களை பலப்படுத் த மக்களுக்காகவே பணம் கொடுக்கிறேன். சில அரசியல்வாதிகள் மக்களிடம் வாக்கு பெற்ற பின்னர் தம் மை பெரியவர்களாக கருதிக்கொண்டு மக்களிடம் செல்வதில்லை. இதன் காரணமாகவே மக்களுக்காக கொடுக்கப்பட்ட பணம் மக்களிடம் செல்லாமல் இருக்கின்றது. 

இதேபோல் நாங்கள் ஆட்சியமைத்ததன் பின்னரான 3 வருடங்களில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து 75 வீதம hன காணிகளை மக்களிடம் மீள வழங்கியிருக்கிறோம். மிகுதி காணிகளையும் மக்களிடம் மீள வழங்குவோம். அந்த விடயத்தில் நான் மிகவும் கரிசணையுடன் இருக்கிறேன். இன்றைய தினம் பொன்னாலை ப ருத்துறை வீதி திறக்கப்படுகிறது. அந்த வீதி 1990ம் ஆண்டு பூட்டப்பட்டது. 

இந்த வீதி திறக்கப்பட்டால் மக்கள்50 கிலோ மீற்றர் தூரம் சுற்றி போகவேண்டிய அவசியம் எழாது. மற்றும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி சிங்களவர்களுடைய கட்சி என சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளப்போவ தில்லை. சிங்களவர்களுடைய கட்சி என்றால் வடகில் தமிழ் வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தியிருக் கமாட்டோம். 

மேலும் சிறீமாவோ பண்டாரநாயக்க யாழ்ப்பாணம் வந்தபோது அவருக்கு இங்குள்ள பெண்கள் தங்கள் தலைமுடியை நிலத்தில் விரித்து அதன் மேல் ஏறி நடந்து போக சொன்னார்களாம்.  அதனை சிறிமாவோ பண்டாரநாயக்க மறுத்தார். அந்தளவுக்கு வடக்கு மக்கள் சுதந்திரக்கட்சிக்கு ஆ தரவளித்தார்கள். அதேபோல் 1982ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது கொப்பேக்கடுவ என்பவருக்கு வடக்கு மக்கள் அமோக ஆதரவினை வழங்கியிருந்தார்கள். அதனை யாரும் மறக்க இயலாது. 

எனவே சிறீலங்கா சுதந்திகட்சி என்பது சிங்கள கட்சி அல்ல. அது இந்த நாட்டில் வாழும் சகல மக்களுக்குமான கட்சியாகும். பண்டார நாயக்க சிறீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கியபோது தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களை சேர்ந்த 3 செயலாளர்களை நியமித்தார். இது சிறீலங்கா சுதந்திரக்கட்சி சகல இனங்களுக்குமான கட்சி என்பதற்கு சிறந்த உதாராணமாகும். 

மேலும் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னரும் பலர் காணாமல்போனார்கள். பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். பலர் அச்சம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறினார்கள். ஆனால் நாங்கள் ஆட்சியமைத்து கடந்த 3 வருடங்களில் அவ்வாறான சம்பவங்கள் நடக்கவில்லை. மஹிந்த ரா ஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் உலகத்தில் பல நாடுகள் இலங்கை மீது கோபம் கொண்டிருந்தார்கள். 

நாங்கள் ஆட்சியமைத்த பின்னர் அந்த நாடுகளுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். ஐ.நா செ யலாளர் நாயகத்தை சந்தித்து இலங்கையில் மனிதாபிமானமும், சுதந்திரமும் ஏற்பட ஒத்துழைப்பு வழங் குங்கள் என கேட்டிருக்கிறேன். இப்போது இலங்கையை பல நாடுகள் மதிக்கின்றன. நான் ஒரு கனவு காண்கிறேன். அந்த கனவை நனவாக்க மக்களுடைய ஒத்துழைப்பு மிக அவசியமாகிறது. 

அந்த கனவு என்னவென்றால் இந்த நாட்டில் தமிழ்,சிங்கள, முஸ்லிம் உள்ளிட்ட சகல இனங்களும் ஒற்றுமையாக வ hழும் சூழலே எனது கனவு. சகன இனங்களும் சந்தேகம் இல்லாமல் சுதந்திரமாக வாழவேண்டும். நா ன் மக்களுடன் நெருக்கமாக இருக்க விரும்புகிறேன். சிலருக்கு அதில் விரும்பமில்லை. நான் உங்களா ல் தேர்வு செய்யப்பட்டவன். அந்தவகையில் உங்களுக்கு சேவையாற்றுவது எனது கடமையாகும். 

நான்கடமையை செய்ய விரும்புகிறேன். அதுவே பலருக்கு விரும்பமில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்ன ர் யாழ்ப்பாணம் வந்து உருழைக்கிழங்கு செய்கையாளர்களை சந்தித்தேன். அப்போது அவர்கள் கேட்ட hர்கள். விதை உருழைக்கிழக்குக்கான வரியை 50 வீதத்தால் குறைக்கும்படி நான் பின்னர் கொழும்பு சென்று அதனை 50 வீதத்தால் குறைத்தேன். பின்னர் நான் பதுளை சென்றிருந்தபோது அங்கே என்னைச்

சந்தித்த உருழைக்கிழக்கு செய்கையாளர்கள் விதை உருழைக்கிழங்கக்கான வரியை 100 வீதத்தால் கு றைக்கும்படி கேட்டார்கள். அதனையும் செய்வதற்கு நான் திட்டமிட்டுள்ளேன். 3 வருடங்களுக்கு முன்ன ர் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக இங்கே வந்தேன். அப்போது இங்கிருந்த மக்களும், அரசியல் தலைவர்களும் எனக்கு ஆதரவளித்தார்கள். அதற்காக நான் இப்போது நன்றி கூறுகிறேன். 

மேலும் பெப்ரவரி 10ம் திகதி என்னுடைய பிரதிநிதிகளாக சிறீலங்கா சுதந்திரக்கட்சி சார்பான உள்@ராட்சி சபை உ றுப்பினர்களை மக்கள் உருவாக்கும்போது மக்களுக்காக நான் இங்கே பல்வேறு செயற்றிட்டங்களை செய்வேன். எங்களுடைய உறுப்பினர்கள் ஊழல் இல்லாமல் திறம்பட செயற்படுவார்கள் என்றார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு