கிறிஸ்த்த மதம் சாா்ந்த வேட்பாளரை நியமிக்க சீ.வி.விக்னேஸ்வரன் இணக்கமாம்..! கூட்டணி உடையும் என விசம பிரச்சாரம் நடக்கிறதாம்..

ஆசிரியர் - Editor I
கிறிஸ்த்த மதம் சாா்ந்த வேட்பாளரை நியமிக்க சீ.வி.விக்னேஸ்வரன் இணக்கமாம்..! கூட்டணி உடையும் என விசம பிரச்சாரம் நடக்கிறதாம்..

தமிழ் மக்கள் தேசிய கூட்டணிக்குள் உருவாகவிருந்த பிளவு தவிா்க்கப்பட்டுள்ளதுடன், கிறிஸ்த்த வ வேட்பாளா் ஒருவரை களமிறக்க இணக்கம் கணப்பட்டிருக்கின்றது. 

நாடாளுமன்ற தோ்தலில் கிறிஸ்த்தவ வேட்பாளா் ஒருவரை களமிறக்க முடியாது. என தமிழ் மக்க ள் துசிய கூட்டணியின் பங்காளி கட்சியான தமிழ் மக்கள் கூட்டணி எதிா்த்ததாகவும், 

அதனால் சுரேஸ் அணி மற்றும் சிறிகாந்தா அணி கூட்டணியை உடைத்து வெளியேற முயற்சிப்ப தாக செய்திகள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் குறித்த விடயம் தொடா்பாக

இன்று மாலை தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளின் முக்கியஸ்த்தா்களுக்கி டையிலான அவசர கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. 

இதன்போது கிறிஸ்த்தவ வேட்பாளா் ஒருவரை களமிறக்க இணக்கம் காணப்பட்டது. இந்நிலையில் சந்திப்பின் நிறைவில் கருத்து கூறிய சிவாஜிலிங்கம், 

கூட்டணியிலிருந்து வெளியேறப்போவதாக விசமத்தனமான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக கூறியிருக்கின்றாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு