சட்டத்தை கையில் எடுத்த வடமராட்சி கிழக்கு- மணற்காடு மக்கள்..! நுாற்று கணக்கில் தேங்கி கிடந்த வாகனங்கள்..

ஆசிரியர் - Editor I
சட்டத்தை கையில் எடுத்த வடமராட்சி கிழக்கு- மணற்காடு மக்கள்..! நுாற்று கணக்கில் தேங்கி கிடந்த வாகனங்கள்..

யாழ்.வடமராட்சி கிழக்கில் உள்ள வாகனங்களுக்கு மணல் அகழ அனுமதி வழங்கப்படாமல் பிற பிரதேசங்களில் உள்ள வாகனங்களுக்கு மணல் அகழ அனுமதித்தமைக்காக யாழ்.மாவட்ட பார வூா்தி சங்கத்தை எதிா்த்து போராட்டம் நடாத்தியுள்ளனா். 

பார ஊர்திகளை மணல் ஏற்றிச் செல்வதற்க்கு விடாது தடுத்து 4 மணிநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பருத்தித்துறை போலீசார் இருதரப்புடனும் சமரசத்தில் ஈடிபட்டனர்.

அதற்கமைவாக இன்றைய தினம் உழவு இயந்திரங்களால் பாரவூர்திகளிற்க்கு ஏற்றிச் செல்வதற்காக பறிக்கப்பட்ட மணல் மண்ணை மட்டும் ஏற்றிச் செல்வதற்கு அனுமதிப்பது என்றும், வடராட்சி கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட கன்ரர்கள் 

மற்றும் பாரவூர்திகளுக்கு அனுமதி பெற்றுக் கொள்வது தொடர்பாக நாளைய தினம் காலை 10 மணிக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் தலைமையில் குடத்தனை கிழக்கு, மேற்கு மற்றும் மணற்காடு கிராமம் அபிவிருத்தி சங்கங்கள், 

பார ஊர்தி உரிமையாளர் சங்கம் ஆகியன இணைந்து இது தொடர்பில் முடிவை எட்டிய பின்னரே மணல் அகழ்வு ,ஏற்றிச்செல்லல் தொடர்பில் பரிசீலிப்பது எனவும் தீர்மானிக்கப்பபட்டே உழவியந்திரங்களால் படைக்கப்பட்ட மணல் பார ஊர்திகளில் ஏற்றிச் செல்ல 

அனுமதிக்க பட்டது.வடமராட்சி கிழக்கு பகுதிகளில் மணல் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற போது பிரதேசத்தினுடைய கன்ரர் மற்றும் பார ஊர்திகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்குவது என்கின்ற உடன்பாட்டின் அடிப்படையிலேயே 

கிராம மக்களால் அனுமதி வழங்கப்பட்டு மணல் அகழ்வு, மற்றும் விநியோக பணிகள் இடம்பெற்று வந்த நிலையில் புதிதாக கன்ரர் மற்றும் ஊர்திகளை பிரதேச மக்கள் கொள்வனவு செய்து பிரதேச செயலாளர் உடைய சிபாருசுடன் பார ஊர்தி உரிமையாளர் சங்கத்தில் 

பதிவு செய்வதற்கு சென்றபோது அந்த கடிதத்தை தம்மால் ஏற்று பதிவு செய்ய முடியாது என்றும் பாரவூர்தி உரிமையாளர்கள் சங்க தலைவர் தெரிவித்திருந்டாகவும் இதனை தொடரந்தே இன்றைய இப் போராட்டம் இடம் பெற்றது. 

இதேவேளை காலை 6 மணியிலிருந்து பார. ஊர்திகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பாரவூர்தி சங்க செயலாளரை சந்திக்க முயன்றபோதும் பாரவூர்தி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சந்திப்பதை முற்றுமுழுதாக மறுத்துவிட்டார். 

இருந்தும் பிரதேச மக்கள் போலீசாருடன் சென்று செயலாளரை சந்தித்தபோது அவர் மாவட்ட செயலகத்தினால் புதிய வாகனங்கள் எதையும் பதிவு செய்ய வேண்டாம் என்று கடிதம் ஒன்று தமக்கு அனுப்பப்பட்தாக தெரிவித்தார். 

இதன் அடிப்படையிலேயே வாகனங்களை வடமராட்சி கிழக்கு வாகனங்களை அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.எனினும் அந்த கடிதம்செயலி ஒன்றின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டு வாசிக்கப்பட்டபோது 

அங்கு பாரவூர்தி சங்கம் தான் தங்களால் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்குட்பட்ட வாகனங்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்றும் , அனுமதி வழங்குவதற்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பார ஊர்தி சங்கத்திறக்கு சிபார்சு செய்ய வேண்டாம் 

என்று கட்டளையிடுமாறு கோரியே மாவட்ட செயலாளருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். அதன் பிரகாரமே மாவட்ட செயலாளர் அவர்கள் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளருக்கு வாகனங்களை பதிவு செய்வதற்கு சிபார்சு செய்ய வேண்டாம் என்று அறிவித்திருந்தார். 

ஆனால் பார ஊர்தி சங்க செயலாளர் மாவட்டச் செயலாளரது அனுமதியின் பிரகாரமே தங்கள் வாகனங்களை அனுமதிக்கவில்லை என்றும் ஒரு பொய்யான ஒரு தகவலை வழங்கியிருந்தார். அண்மையில் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதி வாகனம் ஒன்றிற்க்கு 

அனுமதி எந்த அடிப்படையில் வழகப்பட்டு என்ற அங்கிருந்தவர்களால் பார ஊர்தி சங்க செயலாளரை கேட்டபோது அதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் அடிப்படையில் வழங்க பட்தாக தெரிவித்திருந்தார். 

இதே வேளை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலரிடம் இது தொடர்பில் கேட்டபோது தங்களின் குறித்த விடய அதிகாரி பிற பணி ஒன்றின் காரணமாக வெளியே சென்றுள்ளதாகவும் இதனால் இது தொடர்பில் தன்னால் பதில் கூற முடியாது என்றும் தெரிவித்திருந்தார். 

மாவட்ட செயலாளரால் கடந்த வருடம் 11 ம் மாதமே கடிதம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு அனுப்பப்பட்டதாக கடிதத்தில் குறிப்பிட பட்டிருந்தது.அதற்கு பின்னர் வாகனங்களை பதிவு செய்ய அவரால் இம்மாதம் எவ்வாறு சிபாரிசு கடிதம் 

வழங்க முடியும் என்றும பிரதேச மக்கள் கேள்வி எழு்ப்பினர்.இன்றைய போராட்டத்தில் சிமார் 100 பேர்வரை கலந்து கொண்டனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு