வேட்பாளர் தெரிவுக் குழுவில் வீரவன்ச, கம்மன்பில, வாசுவுக்கு இடமில்லை!

ஆசிரியர் - Admin
வேட்பாளர் தெரிவுக் குழுவில் வீரவன்ச, கம்மன்பில, வாசுவுக்கு இடமில்லை!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தெரிவுக் குழுவில், கூட்டணியிலுள்ள கட்சி தலைவர்களான விமல் வீரவன்ச , உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோருக்கு இடமளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிறிய கட்சிகள் சார்பில் வேட்மனு தாக்கல் செய்வோரை நியமிக்கும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மேற்படி குழுவில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ​பெசில் ராஜபக்‌ஷ, முன்னாள் அமைச்சர் டலஸ் அலஹப்பெரும உள்ளிட்டோர் உள்ளடங்கியிருப்பதாக அறிய முடிகிறது.

Radio