அம்பிகா வீர தமிழ் பெண்ணா..? அரசியல் நாடகம் நடக்கிறதாம் கட்சிக்குள்ளேயே குத்துவெட்டு ஆரம்பம்..!!

ஆசிரியர் - Editor I
அம்பிகா வீர தமிழ் பெண்ணா..? அரசியல் நாடகம் நடக்கிறதாம் கட்சிக்குள்ளேயே குத்துவெட்டு ஆரம்பம்..!!

தமிழ்தேசிய கூட்டமைப்பின் சாா்பில் நாடாளுமன்ற தோ்தலில் மானிப்பாய் தொகுதியில் போட்டி யிடுவதற்கு சந்தா்ப்பம் கிடைத்தமையினை தொடா்ந்து மனித உாிமைகள் ஆணைக்குழு உறுப் பினா் பதவியை அவா் இராஜினாமா செய்துள்ள நிலையில்.

ஐநா மனித உரிமை கவுன்ஸிலின் அனுசரணையில் இருந்து இலங்கை விலகியதால் தன் பதவியை துறந்த வீரத்தமிழ் பெண் அம்பிகா என்று போலியாக அவருக்கான தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் ஆணையாளர்களில் ஒருவராக இருந்த அம்பிகா நேற்று தனது வேட்பாளர் ஆசனம் உறுதியானதை அடுத்து தனது பதவியை உடனடியாக இராஜினாமா செய்து கொண்டார். 

இந்நிலையில் தமிழரசுக் கட்சியை சேர்ந்த சிலர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை வகித்திராத கட்சிக்கு அப்பாற்ப்பட்ட ஒருவரான அம்பிகாவின் தெரிவு தொடர்பில் கட்சிக்குள் கடும் அதிருப்திக்கு இருக்கும் நிலையில் 

இவ்வாறான போலி பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டிருப்பது பலரிடையிலும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு