SuperTopAds

கறுப்பு உடையணிந்து இலங்கையின் சுதந்திரதினத்தை புறக்கணித்த காணாமல் போனோரின் உறவுகள்!

ஆசிரியர் - Editor II
கறுப்பு உடையணிந்து இலங்கையின் சுதந்திரதினத்தை புறக்கணித்த காணாமல் போனோரின் உறவுகள்!

இலங்கையின் 70 ஆவது ஆண்டு சுதந்திர தினமான இன்று(04.02.2018), கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கறுப்பு உடையணிந்து, தலையில் கறுப்புப் பட்டி அணிந்து சுதந்திர தினத்தை புறக்கணித்துள்ளார்கள்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று 350 நாட்களாக காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி போராடி வரும் உறவுகள், எமக்கு எந்த தீர்வும் கிடைக்கபெறவில்லை என்று இம்முறை இந்த சுதந்திர தினத்தை எங்களால் கொண்டாடமுடியாது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை, இலங்கையின் 70 ஆவது சுதந்திரதினத்திலும் எமக்கான சுதந்திரம் இல்லாத நிலையே உள்ளது என தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், வவுனியாவில் இன்று அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில், ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.