யாழ்.மாவட்டத்திற்கு வீட்டுத்திட்டமும், காணி கொள்வனவுக்கு பணமும் கொண்டுவந்தது யாா்..? ஆளுநா்- அங்கஜன் இடையில் அறிக்கை சண்டை..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்திற்கு வீட்டுத்திட்டமும், காணி கொள்வனவுக்கு பணமும் கொண்டுவந்தது யாா்..? ஆளுநா்- அங்கஜன் இடையில் அறிக்கை சண்டை..

யாழ்.மாவட்டத்திற்கு 1375 வீட்டுத்திட்டம் மற்றும் சொந்த காணி இல்லாத மக்களுக்கு காணி கொ ள்வனவு செய்ய 32.5 மில்லியன் பணம் ஆகியவற்றை பெற்றுக் கொடுத்தது ஆளுநரா? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதனா?

என்பது தொடா்பாக இரு தரப்பும் ஊடக அறிக்கைகளில் குடும்பி பிடி சண்டையினை தொடங்கி யிருக்கிறாா்கள். 

வடக்கு மாகாண ஆளுநரின் செய்திக் குறிப்பில்..

வடமாகாண ஆளுநரின் வேண்டுகோளுக்கிணங்க சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் ஊடாக வடமாகாணத்திற்கென ஆயிரத்து 375 வீடுகளை அமைப்பதற்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தெரிவுசெய்யப்படும் ஒரு குடும்பத்திற்கு ஓரு மில்லியன் பெறுமதியான வீடுகளை வழங்கும் வகையில் பயனாளிகள் பட்டியல் தெரிவு நடைபெறுகிறது5 மாவட்ட செயலகங்களில் இருந்து 550 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு விவரங்கள் அடங்கிய பட்டியல் 

ஏற்கனவே அமைச்சுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அடுத்து வரும் சில தினங்களுள் மிகுதி விவரங்களும் நிறைவுசெய்யப்பட்டு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்படும்.மேலும் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தற்போதும் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில்

 44 குடும்பங்களை தேவையான காணிகளை பெற்றுக்கொண்டு அவர்களை மீளக்குடியமர்த்துவதற்கென ரூபா 32.5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது – என்றுள்ளது. 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் கோரிக்கைக்கு இந்த திட்டத்துக்கான வீடுகள் அமைக்கப்படவேண்டும் என்று சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பின் மேலதிக செயலாளர் வீடுகளை அமைக்கும் நிறுவனத்துக்கு 

அனுப்பிவைத்த கடிதத்தின் பிரதியை அவரது ஊடகப் பிரிவு அனுப்பிவைத்துள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு