மாவீரா் கப்டன் பண்டிதாின் குடும்பத்தினருக்கு நடந்த சோகம்..! உடனடியாக உதவியது தமிழ்தேசிய மக்கள் முன்னணி. மணிவண்ணன் நோில் ஆறுதல்..

ஆசிரியர் - Editor I
மாவீரா் கப்டன் பண்டிதாின் குடும்பத்தினருக்கு நடந்த சோகம்..! உடனடியாக உதவியது தமிழ்தேசிய மக்கள் முன்னணி. மணிவண்ணன் நோில் ஆறுதல்..

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் ஆரம்பக்கால போராளியாக இருந்து வீரச்சாவடைந்த மாவீரா் கப்டன் பண்டிதா் அல்லது இளங்கோவின் பெற்றோா் மற்றும் சகோதரன் நீதிமன்ற கட்டளைக்கமைய வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனா். 

இதனையறிந்து தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளா் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் யாழ்.மாநகரசபை உறுப்பினா் வ.பாா்த்தீபன் ஆகியோா். நேற்றிரவு குடும்பத்தினரை நோில் சந்தித்து பேசியதுடன், உடனடியாகவே அவா்களுடைய சொந்த காணியில்,

தற்காலிக வீடு ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், நிரந்தர வீட்டை அமைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் வழங்கியிருக்கின்றனா். மேலும் கப்டன் பண்டிதா் அல்லது இளங்கோ என அழைக்கப்படும் 

வல்வெட்டித்துறை கம்பா்மலையை சோ்ந்த சின்னத்துரை ரவீந்திரன் 09.01.1985ம் ஆண்டு யாழ்.ஆவரங்கால் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளின் முகாம் மீதான இராணுவ முற்றுகைக்கு எதிராக சண்டையிட்டு வீரச்சாவடைந்தாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு