தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்ட வேட்பாளா்கள் இவா்களே..! அறிவித்தது கட்சி..

ஆசிரியர் - Editor I
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாணம் தோ்தல் மாவட்ட வேட்பாளா்கள் இவா்களே..! அறிவித்தது கட்சி..

நாடாளுமன்ற தோ்தலில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி சாா்பில் போட்டியிடவுள்ள வேட்பாளா்களின் பெயா் பட்டியலை அக் கட்சி வெளியிட்டிருக்கின்றது. 

வழக்கம்போல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் கீழ் அதன் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிறது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை 

உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், 

தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் இம்முறையும் களமிறங்குகின்றனர். அவர்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் 

சட்ட ஆலோசகா்களான சட்டத்தரணிகள் கனகரட்ணம் சுகாஷ், நடராஜர் காண்டீபன் காண்டீபன் ஆகியோரும் முதன்முறையாக யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் களமிறங்குகின்றனர். 

கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு றோயல் கல்லூரின் முன்னாள் பிரதி அதிபர் மார்டீன் கணபதிப்பிள்ளை யாழ்ப்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் 

அந்தக் கட்சியின் சார்பில் களமிறக்கப்படுகிறார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணி மகளிர் பிரிவு தலைவியும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினருமான திருமதி வாசுகி சுதாகரன் 

முதன்முறையாக பொதுத் தேர்தலில் களமிறக்கப்படுகிறார்.இவர்களுடன் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக ஒருவர் களமிறக்கப்படவுள்ளார். என்று கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஏனைய இரண்டு வேட்பாளர்கள் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு