யாழ். மாநகர முதல்வருடன் பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு!

ஆசிரியர் - Admin
யாழ். மாநகர முதல்வருடன் பிரான்ஸ் தூதுவர் சந்திப்பு!

யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட்டுக்கும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும் இடையில் விசேட சந்திப்பு இன்று மாநகர முதல்வரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. 

இச் சந்திப்பில் மாநகர சபையின் செயற்பாடுகள், நகரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் பிரான்ஸ் தூதுவர் வினவினார்.

அதற்கு மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பிலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்கள் தொடர்பிலும், மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டு வரும் மாநகர சபை கட்டட பணிகள் தொடர்பிலும் ஏனைய நகர அபிவிருத்திகள் தொடர்பிலும் முதல்வர் விளக்கமளித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு