நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிடுவேன்..! அவா்கள் விரும்பினால் மட்டும், மனம் திறந்தாா் மாநகர முதல்வா்..

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிடுவேன்..! அவா்கள் விரும்பினால் மட்டும், மனம் திறந்தாா் மாநகர முதல்வா்..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலமை தீா்மானித்தால் நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிட தாம் தயாா் என யாழ்.மாநகரசபை முதல்வா் இ.ஆா்ணோல்ட் கூறியிருக்கின்றாா். 

குறித்த விடயம் தொடா்பாக சில ஊடகங்கள் முதல்வருடன் தொடா்பு கொண்டு கேட்டபோதே அ வா் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றாா். 

வட மாகாண சபை உறுப்பினராக இருந்த இமானுவேல் ஆர்னோல்ட், தனது பதவியினை இராஜினாமா செய்திருந்ததுடன், மாநகர சபை தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார். 

இந்தநிலையிலேயே நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க தயார் என யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்றம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கலைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான்கரை ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நாடாளுமன்றத்தினை எந்த சந்தர்ப்பத்திலும் கலைக்க முடியும்.

நேற்று நள்ளிரவுடன் இவ்வாறு நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று நள்ளிரவிற்கு பின்னர் வரும் சுப நேரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக 

தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு