கறுப்பு பட்டி அணிந்து சுதந்திர தினத்தை புறக்கணித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இன்று கருப்பு உடையணிந்து, தலையில் கருப்பு பட்டி அணிந்து இலங்கையின் 70வது சுதந்திர தினத்தை புறக்கணித்துள்ளார்கள்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று 350 நாட்களாக காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி போராடி வரும் உறவுகள் எமக்கு எந்த தீர்வும் கிடைக்கபெறவில்லை என்று இம்முறை இந்த சுதந்திர தினத்தை எங்களால் கொண்டாடமுடியாது என்று தெரிவித்துள்ளார்கள்.