யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திற்கு அதிரடி விஜயம் மேற்கொண்ட உயா்மட்ட குழு..! 2ம் கட்ட அபிவிருத்திக்கு முஸ்த்தீபு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்திற்கு அதிரடி விஜயம் மேற்கொண்ட உயா்மட்ட குழு..! 2ம் கட்ட அபிவிருத்திக்கு முஸ்த்தீபு..

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்தின் 2ம் கட்ட புனரமைப்பு பணிகள் தொடா்பாக ஆரா ய்வதற்காக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவா் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி மற்றும் அவரது குழுவினர் 

நேற்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்தனர். இந்த பயணத்தின் போது, விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்ததுடன் நிலுவையில் உள்ள திட்டங்களை விரைவுபடுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க 

சந்திரசிறி வழிகாட்டுதலை வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் விமான நடவடிக்கைகளைத் மேலும் தொடங்குவதன் மூலம், வட மாகாணத்தில் இருந்து தென்னிந்தியவுக்கான விமான பயணத் தேவைகளின் வளர்ச்சி செய்யப்படும் என்றும், 

சமீபத்திய உள்நாட்டு இணைப்புடன் எதிர்காலத்தில் சர்வதேச பயண மற்றும் சுற்றுலா சந்தை வளரும் என தெரிவித்தார். இதேவேளை யாழ்ப்பாணம் விமான நிலைய அடுத்தகட்ட அபிவிருத்தி பணிகளுக்கு இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாவை வழங்க உடன்பட்டுள்ளது. 

இதன்மூலம் சிறிய பொதிகளை கையாளும் கட்டமைப்பு light baggage handling, முனையப் பகுதி terminal modification, வெளியேறும் நிர்வாக கட்டமைப்பு , நீர் விநியோகம், கழிவு நீர் அகற்றும் கட்டமைப்பு மற்றும் திண்ம கழிவு வெளியேற்றுவதற்கான கட்டமைப்பு 

ஆகியன அதன் கீழ் அமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு