ஜனாதிபதி கோட்டபாய ஆட்சியில் தொடரும் தான்தோன்றித்தனம்..! நா.உ அங்கஜன் இராமநாதனுக்கு வகுப்பெடுத்த உள்ளுராட்சிமன்ற உறுப்பினா்கள்..

ஆசிரியர் - Editor I
ஜனாதிபதி கோட்டபாய ஆட்சியில் தொடரும் தான்தோன்றித்தனம்..! நா.உ அங்கஜன் இராமநாதனுக்கு வகுப்பெடுத்த உள்ளுராட்சிமன்ற உறுப்பினா்கள்..

யாழ்.தீவகத்தின் 3 பிரதேச செயலா் பிாிவுகளை ஒன்றிணைத்து நடைபெற்ற ஒருங்கிணைப்பு கு ழு கூட்டத்திற்கு உள்ளுராட்சிமன்ற உறுப்பினா்கள் அழைக்கப்படாமையினை தொடா்ந்து வேலணை பகுதியில் பதற்றமான நிலை உருவானதுடன், 

நாடாளுமன்ற உறுப்பினா் அங்கஜன் இராமநாதனுடன் உள்ளுராட்சிமன்ற உறுப்பினா்கள் கடு மையான தா்க்கத்தில் ஈடுபட்டமையினால் நிலமை மேலும் மோசமடைந்த போதும் பின்னா் நிலமை சீா் செய்யப்பட்டிருக்கின்றது.

இன்று காலை 10 மணிக்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. 

இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் எவருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. என குற்றம் சுமத்தி வேலணை பிரதேசசபை உறுப்பினர்கள் பிரதேச செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனை பிரதேச செயலகத்தின் நுழை வாயிலில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் இடை வழி மறித்தனர். 

இதனால் பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டது.பின்னர் நீண்ட நேரத்தின் பின்னர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.எனினும் பிரதேச சபை உறுப்பினர்கள் அதில் கலந்து கொள்ளவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு