யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்தி..! இந்தியாவுடன் மீண்டும் உடன்படிக்கை..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் 2ம் கட்ட அபிவிருத்தி..! இந்தியாவுடன் மீண்டும் உடன்படிக்கை..

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகளுக்காக இந்திய அரசா ங்கத்துடன் மீண்டும் உடன்படிக்கை செய்யப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருக்கின்றார். 

இவ்வுடன்படிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பலாலி விமான நிலைய அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் சுமார் 300 மில்லியன் ரூபாவை வழங்க உடன்பட்டுள்ளது. இதன்மூலம் சிறிய பொதிகளை கையாளும் கட்டமைப்பு, 

வெளியேறும் நிர்வாக கட்டமைப்பு, நீர் விநியோகம், கழிவு நீர் அகற்றும் கட்டமைப்பு, மற்றும் திண்ம கழிவு வெளியேற்றுவதற்கான கட்டமைப்பு, ஆகியன அதன் கீழ் அமைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தற்பொழுது பலாலி விமான நிலையத்தில் தற்காலிக விமான பயண கட்டுப்பட்டு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்இ யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதே 

அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அவர் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு