நயன்தாரா மீது முறைப்பாடு!!
முன்னணி பெண் நடிகை நயன்தாரா தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்து முறைப்பாடு எழுந்துள்ளது.
மரிஜுவானா என்ற திரைப்படத்தின் வெளியீட்டு விழா சென்னையில் இடம்பெற்றது. இதில் தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனை குழு உறுப்பினர் கே.ராஜன் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்படி முறைப்பாட்டினை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், “கேரவன் செலவை நடிகர்-நடிகைகளே ஏற்க வேண்டும். நயன்தாராவுடன் சிகை அலங்காரம் செய்பவர், ஒப்பனை கலைஞர், உடை அலங்காரம் செய்பவர், டிரைவர் உள்பட 6 பேர் வருகிறார்கள்.
ஒவ்வொருவருக்கும் தினமும் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை தயாரிப்பாளர் வழங்கவேண்டியுள்ளது. இதன்மூலம் தினமும் 60 -70 ஆயிரம் ரூபாய் வரையில் செலவு ஏற்படுகின்றது.
நடிகைகள் தமன்னா, சமந்தா உள்ளிட்டோரின் உதவியாளர்களுக்கும் இதே மாதிரி படி கொடுக்க வேண்டி உள்ளது. இந்த செலவுகளை நடிகைகளே ஏற்க வேண்டும். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.