யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து அட்டகாசம்..! மருத்துவ உதவியாளா் மீது தாக்குதல், இருவா் கைது, மேலும் 6 பேருக்கு வலைவீச்சு..

ஆசிரியர் - Editor
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து அட்டகாசம்..! மருத்துவ உதவியாளா் மீது தாக்குதல், இருவா் கைது, மேலும் 6 பேருக்கு வலைவீச்சு..

யாழ்.அச்சுவேலி - தெல்லிப்பழை வீதியில் கடந்த 16ம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவா் உயிாிழந்ததை தொடா்ந்து வை த்தியசாலைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். 

இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. அச்சுவேலி – தெல்லிப்பளை வீதியில் கடந்த 16ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியதில் அதனைச் செலுத்திச் சென்றவர் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் 

சேர்க்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டு வந்துள்ளனர். எனினும் நேற்று வியாழக்கிழமை இரவு அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

இளவாலை பெரியவிளானைச் சேர்ந்த நட்சேத்திரம் றொடிசன் அயன் (வயது -34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சிகிச்சை பெற்றவர் உயிரிழந்த விடயத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் அவரது உறவினரான ஊழியர் ஒருவர், 

உயிரிழந்தவருடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். இந்த நிலையில் நேற்றிரவு வைத்தியசாலைக்குள் புகுந்த 8 பேர் அங்கு பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். மருத்துவ சேவையாளர் ஒருவருக்கு 

அவர்கள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட பொலிஸார் அங்கு செல்வதற்குள் அடாவடியில் ஈடுபட்டோர் தப்பித்துள்ளனர். எனினும் பொலிஸார் துரத்திச் சென்று இருவரை கைது செய்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Radio
×