காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் 30 வருடங்கள் தேடுவாரற்று கிடந்த புகைரதம்..! 30 வருடங்களின் பின் சேவையில் ஈடுபடவுள்ளது..

ஆசிரியர் - Editor I
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் 30 வருடங்கள் தேடுவாரற்று கிடந்த புகைரதம்..! 30 வருடங்களின் பின் சேவையில் ஈடுபடவுள்ளது..

30 வருடங்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த ஹான்ஸ்லெட்-7214 (HUNSLET - 7214) எனும் லொக்கோமோட்டிவ் புகையிரத இயந்திரம் புத்துயிர் பெற்று சேவையில் ஈடுபடவுள்ளது.

நாட்டில் யுத்தம் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் காங்சேன்துறை சீமெந்து தொழிற்சாலையில் கைவிடப்பட்டHUNSLET - 7214 லோகோமோட்டிவ் 

புகையிரத இயந்திரம் புத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு insee cement factory railway yard இல் திருத்தி முப்பது ஆண்டுகளுக்கு பிறகு இயங்கு நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

இது மீளவும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.இலங்கையில் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இவ்வாறு கைவிடப்பட்ட வேறு எந்த லொக்கோமொட்டில் 

புகையிரத இயந்திரமும் இல்லை. இதேவேளை 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று தென்னிலங்கையில் கிக்கடுவ பிரதேசத்தில் சுனாமி ஆழிப்பேரலை காரணமாக 

சிக்கி சேதமடைந்த புகையிரத இயந்திரம் திருத்தம் செய்து நான்கு வருடங்களில் பின் சுனாமி தினத்தில் மீள சேவையில் ஈடுபடுத்திய நிகழ்வு பதிவாகியமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு